ETV Bharat / city

எடைக்குறைவான வாகனங்களைத் தயாரிக்கும் சென்னை ஐஐடி குழுவினர்

author img

By

Published : Nov 15, 2021, 8:50 PM IST

Updated : Nov 17, 2021, 9:41 PM IST

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

வாகனங்களில் எடையைக் குறைக்க ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய உயர்தர ஸ்டீல் அலாய் உலோகத்தை சென்னை ஐஐடி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை: சென்னை ஐஐடியில் எடை குறைவான உலோகங்களைப் பயன்படுத்தி வாகன உற்பத்திக்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

விமானங்களில் பயன்படுத்தப்படும் உலோகத்தின் எடையைக் குறைப்பதற்கான ஆராய்ச்சிகள் சென்னை ஐஐடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது கார் போன்ற வாகனங்களை ஸ்டீல் கொண்டு தயாரித்து வருகின்றனர். வாகனங்கள் விபத்து போன்றவை ஏற்பட்டால் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக ஸ்டீல் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. வாகனத்தின் எடையைப் பொருத்து எரிபொருள் அதிகளவில் தேவைப்படுகின்றது.

ஸ்டீல் அலாய் மூலப் பொருள் கண்டுபிடிப்பு

இது குறித்து சென்னை ஐஐடியின் உலோகவியல் துறைப் பேராசிரியர் சுப்பிரமணிய சர்மா கூறுகையில், 'ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய உயர்தர ஸ்டீல் அலாய் மூலப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் மாங்கனீசு, கார்பன், அலுமினியம், சிலிகா, நிக்கல், நியோபியம் ஆகிய மூலப்பொருள்களைக் குறிப்பிட்ட அளவு எடுத்து இயைந்த அளவு கலந்து ஸ்டீல் அலாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எடை குறைவாக தயாரிக்கப்பட்டுள்ள ஸ்டீல் அலாய் உலோகத்தினைப் பயன்படுத்தி கார் தயாரிப்பது குறித்து வணிக ரீதியில் தொழில் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்' என்றார்.

அவரது குழுவில் ஐஐடி கான்பூரின் முன்னாள் பேராசிரியரும், புகழ்பெற்ற விஞ்ஞானியுமான ஆர்.கே.ரே-யும் இடம் பெற்றிருக்கிறார்.

மேலும், இந்த ஆராய்ச்சி குழுவில் பேராசிரியர் கே.சி. ஹரி குமார், ஐஐடி காரக்பூரின் ஒத்துழைப்பாளர் பேராசிரியர் சுமந்த்ரா மண்டல், முனைவர் அசிந்த்யா குமார் பத்ரா மற்றும் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் சிஎன் ஆத்ரேயா ஆகியோர் அடங்குவர்.

இப்போது, ​​ஆராய்ச்சி வெளியீட்டின் வணிகப் பயன்பாட்டிற்காக ஆட்டோ, ஸ்டீல் மேஜர்களை ஈடுபடுத்த சென்னை ஐஐடி குழு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: HR&CE Department: புதிய கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு

Last Updated :Nov 17, 2021, 9:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.