ETV Bharat / business

24 மணிநேரமும் ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் அனுப்பலாம்: டிச., 14 முதல் அமல்!

author img

By

Published : Dec 13, 2020, 10:19 PM IST

24X7 RTGS transaction facility to start from tomorrow
24X7 RTGS transaction facility to start from tomorrow

ஆர்.டி.ஜி.எஸ் முறையில் 24 மணிநேரமும் விடுப்பின்றி பணத்தை அனுப்பும் முறை செயல்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் அடிப்படையில், நாளை (டிச., 14) முதல் ஆர்.டி.ஜி.எஸ் முறையில் 24 மணிநேரமும் பணம் அனுப்பலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மும்பை (மகாராஷ்டிரா): நாளை (டிச., 14) முதல் ஆர்.டி.ஜி.எஸ் முறைப்படி எந்த தடங்கலும் இல்லாமல், 24 மணிநேரமும் பணம் அனுப்பலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆர்.டி.ஜி.எஸ் மூலம் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை வணிகர்கள் உள்ளிட்டோர் பணப்பரிமாற்றம் செய்து வந்தனர். இந்தமுறை மூலம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். இல்லையென்றால், அடுத்தநாள் காலை 7 மணி வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. மேலும், மாதத்தின் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் அனுப்ப முடியாத நிலையும் இருந்தது.

  • RTGS facility becomes operational 24X7 from 12.30 pm tonight. Congratulations to the teams from RBI, IFTAS and the service partners who made this possible.

    — Shaktikanta Das (@DasShaktikanta) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இச்சூழலில், அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த அறிவிப்பில், டிசம்பர் மாதம் முதல் ஆர்டிஜிஎஸ் சேவைகள் 24 மணி நேரமும் கிடைக்கும் என்று அறிவித்திருந்தது. வாடிக்கையாளர்கள் எந்நேரமும் ஆர்.டி.ஜி.எஸ் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியிருந்தார்.

இந்த நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம், பாதுகாப்பான பணப்பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் தங்கு தடையின்றி மேற்கொள்ள முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.