ETV Bharat / bharat

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு 300 சீட் - பாஜக போடும் திட்டம் என்ன?

author img

By

Published : Apr 25, 2023, 7:26 AM IST

UP election 2023
UP election 2023

உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பசமந்தா இஸ்லாமியர்களுக்கு 300 இடங்களை பாஜக ஒதுக்கி உள்ளது.

லக்னோ : உத்தர பிரதேசத்தில் வரும் மே மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. 14 ஆயிரத்து 684 வார்டு உறுப்பினர்களுக்கான உள்ளாட்சி தேர்தல் மே 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் பிரதிபலிப்பாக காணப்படும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளன.

இதில் மாநிலத்தை ஆளும் பாஜக ஒரு படி முன்னே சென்று தேர்தல் யுக்திகளை கையாண்டு வருகிறது. ஏறத்தாழ 14 ஆயிரத்து 684 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 300 இடங்களை இஸ்லாமியர்களுக்கு பாஜக ஒதுக்கி உள்ளது. அதில் பெரும்பாலான இடங்களை பஸ்மந்தா என்கிற இஸ்லாமிய அமைப்புக்கு வழங்க உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இதில் தலீத் மற்றும் பின்தங்கிய வகுப்பைச் இஸ்லாமியர்களை கொண்ட அமைப்பு தான் பசமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. 300 இடங்களை இஸ்லாமியர்களுக்கு வழங்குவதன் மூலம் மாநிலத்தில் ஏறத்தாழ 200 சிறுபான்மையின தலைவர்களை உருவாக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற இது வழிவகை செய்யும் என கூறப்படுகிறது. இந்த 300 இடங்களில் நகராட்சி மற்றும் நாகர் பஞ்சாயத்து தலைவர்களுக்கான 30 இடங்களும் அடங்கும் என கூறப்பட்டு உள்ளது. 300 சீட்டுகளில் பெரும்பாலும் மேற்கு உத்தரபிரதேசத்தில் வழங்க பாஜக திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பகுதிகளில் தான் அதிகளவில் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை உள்ளது. பசமந்தா இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் சீட்டுகள் போக ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் பாஜக சீட் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியின் சிறுபான்மையின பிரிவை வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு உள்ளது.

உத்தர பிரதேசத்தில் 760 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மே மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. மே 4 ஆம் தேதி ஷகரான்பூர், மோரதாபாத், ஆக்ரா, ஜான்சி, பிராயாக்ராஜ், லக்னோ, தேவிபட்டன், கொரக்பூர், வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் முதற் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

தொடர்ந்து மீரட், பரேய்லி, அலிகார்க், கான்பூர், சித்ரகோட், அயோத்தி, பஸ்தி, அசம்கர்க், மிர்சாபூர் உள்ளிட்ட இடங்களில் மே 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெறும் நிலையில் அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : அடிக் அகமதுவின் அலுவலகத்தில் ரத்தக்கறை படிந்த கத்தி - போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.