ETV Bharat / bharat

அடிக் அகமதுவின் அலுவலகத்தில் ரத்தக்கறை படிந்த கத்தி - போலீஸ் விசாரணை!

author img

By

Published : Apr 24, 2023, 11:03 PM IST

பிரயாக்ராஜில் அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் கொலை செய்யப்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன. இம்முறை அடிக்கின் பாழடைந்த அலுவலகத்தில் ரத்தத்தின் தடயங்கள் கிடைத்துள்ளன.

Etv Bharat
Etv Bharat

பிரயாக்ராஜ்: இறப்பதற்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தில் பிரபல ரவுடியும் அரசியல்வாதியுமாக இருக்கும் அடிக் அகமது கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அந்த கொலை வழக்கில் சாட்சியாக இருந்த உமேஷ் பாலு என்பவருக்கு அடிக் அகமது சிறையில் இருந்துகொண்டே கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

இதனால், காவல் துறையினர் உமேஷ் பாலுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். இதனிடையே, கடந்த பிப்.24ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் உமேஷ் பால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இரு பாதுகாவலரும் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிறையில் இருந்த அடிக் அகமதுவுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், உமேஷ் பால் கொலை வழக்கில் அடிக் அகமது குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், அடிக் அகமதுவின் இடிக்கப்பட்ட அலுவலகத்திற்குள் ரத்தக்கறை படிந்த வெள்ளை நிற தாவணி மற்றும் பர்தா ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தவிர அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள மைதானம் முதல் படிக்கட்டுகள் வரை பல்வேறு இடங்களில் ரத்தக்கறை படிந்துள்ளது. இதனுடன் பாத்திரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டனர்.

மேலும், இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், தடயவியல் குழுவினருடன் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு, முழு விவகாரமும் விசாரிக்கப்பட்டனர். இது குறித்து ஏசிபி கோட்வாலி சதேந்திர பி. திவாரி கூறுகையில், “அடிக் அகமதுவின் அலுவலகத்தில் உள்ள படிக்கட்டுகளிலும், அறையிலும் ரத்தத்தின் தடயங்கள் காணப்பட்டன.

தடயவியல் குழு விசாரணை நடத்தி வருகிறது. இது தவிர, அருகில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம், இது தொடர்பான தகவல்களை சேகரிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

இதையும் படிங்க: உமேஷ் பால் கொலை வழக்கு : பிரபல தாதா அடிக் அகமதுக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.