இஸ்ரோ தலைவராக சோம்நாத் பதவியேற்பு

author img

By

Published : Jan 15, 2022, 7:39 AM IST

Somanath assumes charge as ISRO Chief replaces K Sivan

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக சோம்நாத் பதவியேற்றார்.

பெங்களூரு: தமிழ்நாட்டை சேர்ந்த சிவன் இஸ்ரோ தலைவராக பதவி வகித்துவந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததால், கேரளாவை சேர்ந்த எஸ்.சோம்நாத் (58) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி நேற்று(ஜன.14) பதவியேற்றார்.

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோம்நாத். இவர் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டரில் இயக்குநராக பதவி வகித்துள்ளார். கொல்லம் டி.கே.எம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்.

இதையடுத்து பெங்களூருவில் இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ்-ல் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். 2018ஆம் ஆண்டில் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் செண்டர் தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்த மூன்றாண்டுக்கு இஸ்ரோ தலைவராகச் செயல்படுவார். இவர் பதவியேற்றபோது, முன்னாள் தலைவர் சிவன் உடனிருந்தார்.

இதையும் படிங்க: பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.