பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்

author img

By

Published : Jan 15, 2022, 6:54 AM IST

new asteroid

சுமார் 1 கி.மீ. விட்டம் உள்ள ராட்சத விண்கல் ஜனவரி 18ஆம் தேதி பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்: இதுகுறித்து அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் ஜனவரி 18ஆம் தேதி ஒரு கி.மீ. விட்டம் உள்ள ராட்சத விண்கல் பூமியைக் கடந்து செல்ல உள்ளது.

இந்தக்கல் பூமியிலிருந்து 19 லட்சம் கி.மீ. தொலைவில் கடக்க உள்ளது. இந்த இடைவெளியானது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தை விட 5.15 மடங்கு அதிகம். மணிக்கு 70 ஆயிரம் கி.மீ. கடந்து செல்லும்.

அதன்பாதையில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் பூமியை தாக்க வாய்ப்புள்ளது. இந்தக்கல் தாஜ்மஹாலை விட இரண்டு மடங்கு பெரியதாக இருப்பதால், தீவிரமாக கண்காணித்துவருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதுபோன்ற பெரிய அளவிலான விண்கல் இருமுறை பூமியை கடந்துசென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி ஏவப்பட்டது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.