ETV Bharat / bharat

தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு: போலீஸார் விசாரணை!

author img

By

Published : Jun 15, 2023, 3:56 PM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

குஷிநகர் (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நவமி மற்றும் சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நேற்று இரவு தங்கள் வீட்டில் இரவு உணவு உட்கொண்டுவிட்டு உறங்கச்சென்றுள்ளனர். ஆனால், புழுக்கம் காரணமாக நவமி மட்டும் வீட்டிற்கு வெளியே வந்து உறங்கியுள்ளார்.

இதையும் படிங்க: உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்: 6 பேரில் ஒருவருக்கு அநீதி.. தீர்வு கிடைப்பது எப்போது?

ஆனால், அவரின் மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகள் அங்கித் (10), லட்சுமினா (9), ரீட்டா (3), கீதா (2), பாபு (1) ஆகிய ஐந்து பேரும் வீட்டிற்குள் உறங்கியுள்ளனர். இதனை அடுத்து நள்ளிரவில் அவர்கள் வீட்டில் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ விபத்தில் சங்கீதா மற்றும் அவரின் குழந்தைகள் 5 பேர் என மொத்தம் 6 பேர் அதில் சிக்கினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சங்கீதாவின் கணவர் நவமி மற்றும் அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள், மற்றும் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: உணவக ஊழியர்கள் மீது தாக்குதல்: ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்!

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய சங்கீதா மற்றும் குழந்தைகளை மீட்க சென்ற அதிகாரிகள், உடல் கருகிய நிலையில் உயிரிழந்த 6 பேரின் உடலையும் மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அதிகாரிகள், தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும், மனைவி உள்ளிட்ட குழந்தைகள் அனைவரும் உள்ளே உறங்கும்போது நவமி மட்டும் ஏன் வெளியே உறங்க வேண்டும். மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்ற நவமி எடுத்த முயற்சி என்ன? இந்த விபத்து தானாக ஏற்பட்டதா? இல்லை ஏதேனும் சதி வேலையா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 4 லட்சம் வீதம் 24 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அந்த ஊரே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் ஒரு வயது குழந்தை பாபுவின் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே தாளாத மனவேதனையை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: Wrestlers protest: பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி போலீஸ் இன்று துணை குற்றப்பத்திரிகை தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.