ETV Bharat / bharat

இயல்பைவிட அதிகரிக்கும் வெப்பம்... முன்னெச்சரிக்கை தேவை...

author img

By

Published : May 1, 2022, 10:54 PM IST

Rajesh Bhushan  Rajesh Bhushan letter to state health department  state health department  Rajesh Bhushan tell about heat  அதிகரிக்கும் வெப்பம்  நாட்டில் அதிகரிக்கும் வெப்பம்  மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன்  மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கடிதம்  மாநில சுகாதாரத்துறை
ராஜேஷ் பூஷன்

இயல்பை விட வெப்பம் அதிகரித்து வருவதால், கூடுதல் முன்னெச்சரிக்கை தேவை என மத்திய சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

டெல்லி: நாடு முழுவதும் தற்போது இயல்பை விட சூரிய வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். பிற்பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வருகிறது.

இந்நிலையில், வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர், “நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இனி வரும் நாள்களில் வெப்பநிலையானது இயல்பை விட அதிகரிக்கும் என்பதால், அனைத்து மாநிலங்களும் வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: கிழக்கு லடாக்கில் எந்தப் பகுதியையும் இழக்க ராணுவம் அனுமதிக்காது- ஜெனரல் மனோஜ் பாண்டே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.