ETV Bharat / bharat

ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை தொடங்கி வைத்தார் திரெளபதி முர்மு!

author img

By

Published : Aug 17, 2023, 8:22 PM IST

Etv Bharat
Etv Bharat

INS Vindhyagiri: இந்திய கப்பற்படையில் புராஜக்ட் 17ஏ திட்டத்தின் 6வது போர்க்கப்பலான ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைத்தார்.

கொல்கத்தா (மேற்கு வங்கம்): குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 17) காலை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவுக்கு வந்தடைந்தார். கொல்கத்தா விமான நிலையத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை, மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் வரவேற்றார். இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் இன்ஜீனியர்ஸ் லிமிடெட் வளாகத்தில் வைத்து, ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை தொடங்கி வைத்தார்.

இந்த போர்க்கப்பல், இந்திய கப்பற்படையின் புராஜக்ட் 17ஏ-இன் (Project 17A) கீழ் 6வது போர்க்கப்பல் ஆகும். இதனைத் தொடர்ந்து நிகழ்வில் பேசிய திரெளபதி முர்மு, “இந்தியாவின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதை இந்த விந்தியகிரி போர்க்கப்பல் தொடக்கம் குறிக்கிறது.

இந்த போர்க்கப்பல் கட்டுமானத்தின் மூலம் ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்ற இலக்கை அடைவதற்கான வழியாக பார்க்கப்படுகிறது. புராஜக்ட் 17ஏ-இன் கீழான விந்தியகிரி போர்க்கப்பல் ஆனது, நாட்டின் தன்னம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான உறுதியைக் கொடுத்து உள்ளது.

இந்த திட்டம் மாநிலத்தின் கலை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான புதிய கண்டுபிடிப்புகளை நிரூபிக்கிறது. இந்தியா, உலகத்தில் 5வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. அதேநேரம், இன்னும் சில ஆண்டுகளில் நமது நாடு மூன்றாவது பொருளாதார நாடாக உருவாகும்.

மேலும், ஏற்றுமதி மற்றும் நாட்டின் பொருள் ஏற்றுமதியில் கடல்சார் பயண பங்களிப்பு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் மிகப்பெரிய பகுதியான இந்தோ - பசிபிக் கடற்பகுதிகள் பல்வேறு அம்சங்களைக் கொண்டு உள்ளது.

  • President Droupadi Murmu graced the launch ceremony of Vindhyagiri – the sixth ship of project 17A of Indian Navy at Kolkata. The President said that the launch of Vindhyagiri marks a move forward in enhancing India’s maritime capabilities. It is also a step towards achieving the… pic.twitter.com/IsEl76MItu

    — President of India (@rashtrapatibhvn) August 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுப்பதற்கு இந்திய கப்பற்படையினர் எப்போதும் முனைப்புடன் இருக்க வேண்டும்” என தெரிவித்து உள்ளார். இந்த போர்க்கப்பல் தொடக்க நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் மற்றும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐஎன்எஸ் விந்தியகிரியின் சிறப்பம்சங்கள்: இந்திய கப்பற்படைக்காக புராஜக்ட் 17 ஆல்பா திட்டத்தின் கீழ் தயாராகும் 7 கப்பல்களில் ஐஎன் எஸ் விந்தியகிரி 6வது போர்க்கப்பல் ஆகும். முன்னதாக கடந்த 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரையில் முதல் 5 கப்பல்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், இன்று தொடங்கப்பட்டு உள்ள ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பலானது, கொல்கத்தாவைச் சேர்ந்த போர்க்கப்பல் தயாரிப்பு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பேரில் கட்டமைக்கப்பட்ட 3வது மற்றும் கடைசி திருட்டு போர்க்கப்பல் ஆகும்.

மேலும், இந்த போர்க்கப்பலின் 75 சதவீத அளவிலான பாகங்கள் மற்றும் நுட்பங்கள் உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். இந்த போர்க்கப்பல் இந்திய கப்பற்படைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாக பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகே ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்த புராஜக்ட் 17ஏ போர்க்கப்பல்கள் ஏவுகணை போர் விமானங்கள் ஆகும். இது 149 மீட்டர் நீளம் கொண்டது. அதேநேரம், 6 ஆயிரத்து 670 டன் எடையைக் கொண்டு செல்லவும், 28 நாட் வேகத்தையும் கொண்டு உள்ளது. மேலும், இந்த போர்க்கப்பலானது காற்று, மேற்பரப்பு மற்றும் துணைமேற்பரப்பு ஆகிய மூன்று கோணங்களிலும் நடுநிலைத் திறனை வகிக்கும் திறன் கொண்டது என கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் இன் ஜீனியர்ஸ் லிமிடெட் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

இதையும் படிங்க: ‘நேருவை அவரின் பணிகளால் மக்கள் அறிகிறார்கள்’ - நேரு அருங்காட்சியக பெயர் மாற்றம் குறித்து ராகுல் காந்தி கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.