ETV Bharat / bharat

இனி காந்தி குடும்பத்தை சேர்ந்த எவரும் கட்சித் தலைவராக வரமாட்டார்கள்

author img

By

Published : Sep 23, 2022, 4:49 PM IST

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்.24ஆம் தேதி தொடங்கி செப்.30ஆம் தேதி வரை நடக்கிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக். 1ஆம் தேதியும், வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவது அக்.8ஆம் தேதியும் நடக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பட்சத்தில், வாக்குப் பதிவு அக்.17ஆம் தேதி நடைபெறும்.

அந்த வாக்குகள் அக்.19ஆம் தேதி எண்ணப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்று நேரு குடும்பம் உறுதியாக உள்ளதாகவும், குறிப்பாக தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்பட்டன.

இதை உறுதி செய்யும் வகையில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இனி காந்தி குடும்பத்தை சேர்ந்த எவரும் கட்சித் தலைவராக வரமாட்டார்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட், "காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் தீர்மானத்தின் போது, இந்தப் பதவியை ஏற்குமாறு ராகுல் காந்தியிடம் கேட்டுக் கொண்டேன். அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இனி காந்தி குடும்பத்தை சேர்ந்த எவரும் காங்கிரஸ் கட்சித் தலைவராக வரமாட்டார்கள்.

எங்கள் குடும்பத்தை அல்லாதவர்கள் தலைவராக வரவேண்டும். நான் முன்பே கூறியது போல் பதவி இல்லாமல் கட்சிக்காக பாடுபடுவேன் என்றார். ஆகவே நான் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளேன். வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியை விரைவில் அறிவிக்கிறேன். நான் காங்கிரஸ் தலைவரானால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய முயற்சிகள் மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.