ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை

author img

By

Published : Sep 23, 2022, 4:20 PM IST

Four of family sentenced to death for killing couple in Uttar Pradesh

உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதுமண தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பதாவ் மாவட்டத்தில் புதுமண தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்து, அரசு தரப்பு வழக்கறிஞர் அனில் குமார் சிங் கூறுகையில், பதாவ் மாவட்டம் உரைனா கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த் (24) - ஆஷா (22) இருவரும் காதலித்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

அதன்பின் டெல்லிக்கு சென்று வாழ்க்கையை தொடங்கினர். சில வாரங்களில் ஆஷாவின் தந்தை கிஷன்பால் டெல்லிக்கு விரைந்து இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்துவந்தார். அதன்பின் இருவரையும் கொடூரமாக கொலை செய்தார். இதற்கு கிஷன்பாலின் மனைவி ஜல்தாரா, அவர்களது மகன்களான விஜய்பால் மற்றும் ராம்வீர் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த கோவிந்த்தின் தந்தை பப்பு சிங் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த நிலையில் இன்று (செப் 23) மாவட்ட நீதிபதி பங்கஜ் அகர்வால் கிஷன்பால், அவரது மனைவி ஜல்தாரா, அவர்களது மகன்களான விஜய்பால், ராம்வீர் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அசாமில் மகள் இறந்த வழக்கில் தந்தை உட்பட 5 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.