ETV Bharat / bharat

மாணவி மீது ஆசிட் வீசிய வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 9:22 PM IST

மாணவி மீது ஆசிட் வீசிய வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜம்மு காஷ்மீர் நீதிமன்ற உத்தரவு.
மாணவி மீது ஆசிட் வீசிய வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜம்மு காஷ்மீர் நீதிமன்ற உத்தரவு.

ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 2019 ஜம்மு காஷ்மீர் இழப்பீடு சட்டத்தின் கீழ் அதிகப்படியான இழப்பீடு தொகையை வழங்க ஸ்ரீநகர் நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர் சட்ட சேவை ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

ஸ்ரீநகர்: 2014ஆம் ஆண்டு ஸ்ரீநகர் பகுதியில் 20 வயது சட்டக் கல்லுாாி மாணவி மீது ஆசிட் வீசிய வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜம்மு காஷ்மீர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் இழப்பீட்டுத் சட்டத்தின் படி அதிகபட்ச இழப்பீட்டு தொகை வழங்க சட்ட சேவை ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் நவ்ஷேரா பகுதியில் 20 வயது சட்டக்கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசி தாக்குதல் நடைபெற்றது. மாணவி மீதான ஆசிட் தாக்குல் தொடர்பாக காஷ்மீர் ஐஜிபி ஏ.ஜி.மிர் மேற்பார்வையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

அதில், ஸ்ரீநகர் எஸ்.எஸ்.பி அமித் குமார் மற்றும் எஸ்பி ரயீஸ் முகமது பட் (தற்போது தெற்கு காஷ்மீர் டிஐஜி) குற்றவாளிகளை அன்று இரவே கைது செய்தனர். குற்றச் சம்பவத்தில் ஈடுப்பட்ட இர்ஷாத் அமீன் வானி மற்றும் உமர் நூர் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீநகர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பீன் படி, ஆர்.பி.சி 120-பி பிரிவின் கீழ் (சதி செயலில் ஈடுபட்டது) 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 25000 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் மேலும் ஆர்.பி.சி. 326 ஏ பிரிவின் கீழ் (கடுமையான காயம் எற்படுத்தியது) ஆயுள் தண்டைனை மற்றும் ரூபாய் 5 லட்சம் அபதாரம் விதிக்கப்படுகிறது. இந்த ஆயுள் தண்டனை உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் ஆர்.பி.சி. 201 பிரிவின் கீழ் (ஆதாரங்களை அழித்தது) 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

ஆசிட் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்ட 20 வயது மாணவியின் சிகிச்சைக்கு மற்றும் மேல் சிகிச்சைக்கு தேவைப்படும் தொகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2019 ஜம்மு காஷ்மீர் இழப்பீடு திட்டத்தின் படி அதிகப்படியான தொகையை இழப்பீடாக பெற்று தர உறுப்பினர் செயலாளர் மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்ட சேவை ஆணையம் பரிசிலணை செய்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்ததில் குற்றவாளிகள் உடலில் சிதைவை எற்படுத்தக் கூடிய பொருளை பயன்படுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடலில் சிதைவு மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் மற்றும் அவரின் எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையைத் தவிர வேறு எந்த தண்டனையும் பாதிக்கப்பட்டவருக்கு முழுமையான நீதியை வழங்க முடியாது என இந்த நீதிமன்றம் நம்புகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர் ஈடிவி பாரத்-க்கு அளித்த பேட்டியில், "குற்றவாளிகள் நீதிமன்றம் வழங்கி தீர்ப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் தொடந்து ஈடுபடுவேன் மேலும் ஆசிட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கார்த்தி தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.