ETV Bharat / bharat

இஸ்ரோவின் அடுத்த திட்டம்.. சிங்கப்பூரின் 7 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி56 ராக்கெட்!

author img

By

Published : Jul 24, 2023, 4:38 PM IST

ISRO
ISRO

சிங்கப்பூர் நாட்டின் DS-SAR செயற்கைகோள் உள்பட 7 செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி சி56 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 30ஆம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

சென்னை : சிங்கப்பூர் நாட்டின் 360 கிலோ எடை கொண்ட DS-SAR செயற்கைகோள் உள்பட 7 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி56 ராக்கெட் வரும் ஜூலை 30ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எல்எம்வி ஆகிய ராக்கெட்டு வகைகள் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இது தவிர வணிக ரீதியாகவும் இஸ்ரோ செயற்கைகோள்களை விண்ணி ஏவி வருகிறது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி உலகமே உற்று பார்த்த சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் 615 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலத்தை நிலை நிறுத்த 5வது கட்ட உந்துவிசை பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் தரையிறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் ஜூலை 30ஆம் தேதி மீண்டும் ஒரு ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட DS-SAR என்ற பிரதான செயற்கைகோள் உள்பட 7 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 535 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக சிங்கப்பூர் நாட்டின் 7 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதற்கு முன்பாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் போலவே சி-56 ராக்கெட்டும் அதிநவீன முறையின் கட்டமைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்டி பொறியியல் நிறுவனம் இனைந்து உருவாக்கிய இந்த DS-SAR செயற்கைகோள் பல்வேறு அதநவீன தொழில்நுட்பத்துக்காக பயன்பட்டுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செயற்கைகோள் உடன் 23 கிலோ எடை கொண்ட VELOX-AM என்ற தொழில்நுட்ப விளக்க மைக்ரோ செயற்கைக்கோள், ARCADE என்ற வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் செயற்கைக்கோள், 'எக்ஸ்ப்ளோரர்' என்ற ஒரு சோதனை செயற்கைக்கோள், SCOOB-II என்ற 3யு நானோ செயற்கைக்கோள், Galassia-2 என்ற மற்றொரு 3யு நானோ செயற்கைக்கோள் மற்றும் ORB-12 STRIDER ஆகிய 7 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி56 ராக்கெட்டில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த சில நாட்களில் பிஎஸ்எல்வி சி56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், சந்திரயான் 3 விணகலத்தின் பிரபல்சன் எனப்படும் உந்துவிசை தொகுதியின் 5வது கட்டத்தை இயக்குவதற்காக ஜூலை மாதம் இறுதிக்கு ராக்கெட் ஏவுதல் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : நாடாளுமன்றத்தில் தொடர் அமளி! ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.