ETV Bharat / bharat

நாடு முழுக்க சட்டென்று குறைந்த கரோனா பாதிப்பு!

author img

By

Published : Mar 19, 2022, 12:53 PM IST

நாடு முழுக்க கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,075 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona
corona

டெல்லி : நாட்டில் கரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 352 ஆக உள்ளது. தற்போது நாட்டில் கரோனா பாதிப்பாளர்கள் விகிதம் 0.06 ஆக உள்ளது.

இது குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 382 பேர் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

ஆக இதுவரை வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 61 ஆயிரத்து 926 ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

அந்த வகையில் குணமுடைவோர் விகிதம் 98.73 ஆக காணப்படுகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 75 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 71 ஆக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 12 முதல் 14 வயதுள்ள பதின்ம சிறுவர்- சிறுமியருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மயிலாடுதுறை.. நீங்கள்தான் கடைசி இடம்.. கடிந்துக்கொண்ட அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.