ETV Bharat / bharat

"எதிர்பார்ப்புகளை ஒதுக்கிவிட்டு களத்தில் சுதந்திரமாக விளையாட வேண்டும்" - ஜஸ்பிரித் பும்ரா பேட்டி!

author img

By

Published : Aug 21, 2023, 2:30 PM IST

Ind vs Ire t20: அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் அது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் பும்ரா மனம் திறந்து உள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா
Jasprit Bumrah

டப்ளின்: ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி தற்போது அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து 2வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில், நேற்று 2வது போட்டியை வென்ற பின்பு இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பேட்டியில் கூறியதாவது; "தொடரை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய பிட்ச் உலர்ந்திருந்தது. அதனால், பிட்சு மித வேகமாக இருக்கும் என்று கருதினோம். அதன் காரணமாகவே முதலில் பேட் செய்ய முடிவு செய்தோம்.

இதையும் படிங்க: உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சூடு... பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீரர்கள்!

இந்திய அணியின் வீரர்கள் அனைவருமே மிகவும் உறுதியுடன் இருந்தனர். அதனால் அணியின் வீரர்களை தேர்வு செய்வது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஒவ்வொறு வீரருக்கும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை இருந்தது. எதிர்பார்ப்புகளுடன் விளையாடினால் அது உங்களுக்கு அழுத்ததை ஏற்படுத்தும். அதனால் எதிர்பார்ப்புகளை ஓதுக்கி வைத்துவிட்டு களத்தில் சுகந்திரமாக விளையாட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இப்போட்டியில் ஆட்ட நாயகனாக ரிங்கு சிங் தேர்வானார். அவர் கூறுகையில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் என்ன செய்தேனோ அதையே இங்கே முயற்சிக்கிறேன். நான் மிகவும் நம்பிக்கையுடன், உறுதியுடனும் இருக்கிறேன். எனது அனைத்து முயற்சிகளும் பலனளித்தன. எனது முதல் ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருதை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 23ம் தேதி டப்ளின் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: Jasprit Bumrah: இந்திய அணியின் துணை கேப்டன் ஆகிறாரா பும்ரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.