ETV Bharat / bharat

Goa Polls: 22 தொகுதிகளை வென்று மீண்டு(ம்) வருவோம்- பிரமோத் சாவந்த்!

author img

By

Published : Jan 27, 2022, 7:02 PM IST

Goa
Goa

கோவா முதல்-அமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் உத்பல் பாரிக்கர் ஆகியோர் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில், “கோவாவில் 22 தொகுதிகளுக்கும் மேல் வென்று மீண்டும் ஆட்சியை பிடிப்போம்” என முதல்- அமைச்சர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

பனாஜி : பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சுயேச்சையாக களம் காண்கிறார் முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் ( Utpal Parrikar).

இவர், பனாஜி சட்டப்பேரவை தொகுதியில் (Panaji Assembly constituency) போட்டியிடுகிறார். முன்னதாக உத்பல் பாரிக்கர் பனாஜியில் உள்ள மகாலட்சுமி திருக்கோயிலில் (Goddess Mahalakshmi temple) வழிபாடு நடத்தினார்.

இதற்கிடையில் முதல்- அமைச்சர் டாக்டர். பிரமோத் சாவந்த் (Dr Pramod Sawant) மற்றும் பனாஜி பாஜக வேட்பாளர் பாபுஸ் மோன்செராத் (Babush Monserrat) ஆகியோரும் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

கோவா முதல்-அமைச்சர் டாக்டர். பிரமோத் சாவந்த் சியோலிம் (Siolim) தொகுதியில் போட்டியிடுகிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரமோத் சாவந்த், “மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம். 22 தொகுதிகளுக்கும் மேல் வென்று கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும்” என்றார்.

Goa Assembly polls: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர்!

40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு பிப்.14ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதையும் படிங்க : Goa Polls: மனோகர் பாரிக்கர் மகன் தனித்துப் போட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.