ETV Bharat / bharat

முதலமைச்சருக்கு கருப்பு கொடி காட்டியதால் ஆத்திரம்! இளைஞர் காங்கிரசார் மீது தாக்குதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 4:15 PM IST

Etv Bharat
Etv Bharat

கேரளாவில் முதலமைச்சர் வாகனத்திற்கு கருப்பு கொடி காட்டிய இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ வேகமாக பரவி வரும் நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Youth Congress Black flag protesters beaten FIR lodged against 14 DYFI activists CM justified DYFI action

கண்ணூர் : கேரள மாநிலம் கண்ணூர் அருகே முதலமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் கடுமை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கலையசேரி தொகுதிக்குட்பட்ட பழையங்காடி அடுத்த எரிபுரம் பகுதியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு திரும்பிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் கருப்பு கொடி காண்பித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்த கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் (DYFI ) இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

ஹெல்மட் மற்றும் இரும்பு ராடு உள்ளிட்ட உபகரணங்கள் கொண்டு கடுமையாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் (DYFI ) 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும், இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது வயர்லெஸ் செட் கொண்டு தாக்குதல் நடத்திய காவல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் தெரிவித்து உள்ளனர். இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்தும், அதையும் மீறி கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்துமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் முன்மாதிரியாக நடந்து கொண்டதாகவும், பேருந்தின் முன் விழ இருந்த இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை அவர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

இரண்டு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேருந்தினுள் விழ முயற்சித்ததாகவும் அவர்களை இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் பாய்ந்து தடுத்து நிறுத்தியதாகவும் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தாக்குதல் இல்லை என்றும் பேருந்தின் முன்வரிசையில் அமர்ந்து நடந்ததை தான் பார்த்ததாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து; முதன்முறையாக சூடான உணவை அனுப்பும் மீட்புப்படை.. காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.