ETV Bharat / bharat

EXCLUSIVE:1983 உலகக்கோப்பை வெற்றிக்கு இணையானது தாமஸ் கோப்பை தங்கம் - பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த்!

author img

By

Published : May 16, 2022, 7:14 PM IST

புல்லேலா கோபிசந்த்
புல்லேலா கோபிசந்த்

தாமஸ் கோப்பை ஆடவர் பேட்மிண்டனில் இந்தியா தங்கம் வென்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாக நட்சத்திர பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பேட்மிண்டன் ஆடவர் பிரிவில் இந்தியா முதல்முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்திருப்பது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திற்கு, கடந்த 2001இல் இங்கிலாந்து பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்றவரும், தேசிய பேட்மிண்டன் பயிற்சியாளருமான புல்லேலா கோபிசந்த் தொலைபேசி வாயிலாக பேட்டியளித்தார்.

வரலாற்று வெற்றி: வீரர்களின் கடின உழைப்பு தாமஸ் கோப்பை வெற்றிக்கு வழிவகுத்திருப்பதாகவும், இது 1983இல் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்ற தருணத்திற்கு இணையாக பார்க்கப்படுகிறது எனவும் கூறினார். இத்தகைய வெற்றியைப் பெறுவோம் என யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் என்றும்; பேட்மிண்டன் உலகில் தாமஸ் கோப்பையை வெல்வது மிகப்பெரியது எனவும் புல்லேலா கோபிசந்த் தெரிவித்தார்.

பேட்மிண்டனில் பிரகாசமான எதிர்காலம் - கோபிசந்த்: பேட்மிண்டன் உலகில் இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதை கண்டு தான் பெருமிதம் கொள்வதாகவும் , வரும் காலங்களிலும் இந்திய வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என நம்புவதாகம் கூறினார். தற்போது இந்தியாவுக்காக பதக்கங்களை வென்று குவிக்கும் சாய்னா , சிந்து , காஷ்யப் , ஸ்ரீகாந்த் கிடாம்பி , ஹெச்.எஸ்.பிரனாய் அனைவருமே கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தாமஸ் கோப்பை பேட்மிண்டன் - வரலாறு படைத்த இந்திய ஆடவர் அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.