ETV Bharat / sports

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் - வரலாறு படைத்த இந்திய ஆடவர் அணி!

author img

By

Published : May 15, 2022, 4:50 PM IST

தாமஸ் கோப்பை
தாமஸ் கோப்பை

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டிகளில் ஜாம்பவனான இந்தோனேஷிய அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச்சாதனை படைத்துள்ளது.

தாய்லாந்து: தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்திய அணி 14 முறை சாம்பியனான இந்தோனேஷியாவை எதிர்கொண்டது.

அசத்திய லக்‌ஷயா சென்: முதலாவதாக ஆடவர் ஒற்றையரில் இந்தியாவின் லக்‌ஷயா சென் - இந்தோனேஷியாவின் ஆண்டனி சினிசுகாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 8க்கு 21 என்ற கணக்கில் இழந்த போதிலும் , பின்னர் சிறப்பாக ஆடி அடுத்த இரண்டு செட்களை 21க்கு 17 , 21க்கு 16 என்ற கணக்கில் கைப்பற்றி லக்‌ஷயா சென் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

மாஸ் காட்டிய சாத்விக்-சிராக் : இரண்டாவதாக நடைபெற்ற ஆடவர் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிசெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, அஷான் மற்றும் கெவின் ஜோடியை 18க்கு 21 , 23க்கு 21, 21க்கு 19 என்ற கணக்கில் போராடி வீழ்த்தியது. சாத்விக் சாய்ராஜ் ரங்கிசெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடியின் வெற்றியால் இந்தியா 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

சாதித்த ஸ்ரீகாந்த் கிடாம்பி: இன்னும் ஒரு ஆட்டத்தில் வென்றால் இந்தியா கோப்பையை கைப்பற்றும் சூழலில் அனுபவ வீரரான ஸ்ரீகாந்த் கிடாம்பி - நடப்பு ஆசிய சாம்பியனான ஜோனாதன் கிரிஸ்டியை எதிர்கொண்டார். இதில் 21க்கு 15 , 23க்கு 21 என்ற கணக்கில் ஸ்ரீகாந்த் , ஜோனாதன் கிரிஷ்டியை வீழ்த்தி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்ததோடு , தாமஸ் கோப்பை வரலாற்றில் இந்தியா தங்கம் வெல்வதையும் உறுதி செய்தார்.

ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றதும் சக இந்திய வீரர்கள் அனைவரும் களத்திற்குள் புகுந்து தேசியக் கொடியுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.