ETV Bharat / bharat

KIIFB முறைகேடு: தாமஸ் ஐசக்கை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை..!

author img

By ANI

Published : Jan 7, 2024, 6:39 PM IST

தாமஸ் ஐசக்கை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
தாமஸ் ஐசக்கை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

Kerala masala bond case: KIIFB முறைகேடு குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் கேரளா மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்-க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கேரளா: கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், நிதியமைச்சராக இருந்தவர் பேராசிரியரும் அரசியல்வாதியுமான தாமஸ் ஐசக். ஆட்சியிலிருந்த போது கேரளா உட்கட்டமைப்பு நிறுவனத்தின் (KIIFB) துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், நிதியமைச்சராகப் பதவி வகித்த வந்த காலத்தில் அன்னிய செலாவணி சட்டத்தை (FEMA)மீறி நிதி திரட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அமலாக்கத்துறை இவர் மீது வழக்குப்பதிவு செய்தது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தாமஸ் ஐசக்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து தாமஸ் ஐசக் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

தொடர்ந்து, அமலாக்கத்துறையின் விசாரணையைப் புறக்கணித்து வந்த தாமஸ் ஐசக், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "அமலாக்கத்துறை என் மீது முறையற்ற புகார்களை அடுக்கி வருகின்றது. சட்டத்தை மீறி எந்த ஊழல் செயலிலும் ஈடுபடவில்லை. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் படியே அனைத்தும் நடைபெற்றது.

கருப்புப் பணத்தின் புழக்கம் குறித்து சந்தேகம் இருந்தால் ரிசர்வ் பேங் ஆஃப் இந்தியா பணப்பரிமாற்றம் குறித்துச் சோதனையிட்டு நடவடிக்கை எடுக்கட்டும். அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் இந்த சோதனையில் ஈடுபட வேண்டும். ஆனால் ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை இப்படி முறையற்ற சோதனைகளில் ஈடுபடுவது சட்டத்தை மீறும் செயலாகும். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் முறைகேடுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அப்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற உத்தரவின் படி தாமஸ் ஐசக் மற்றும் KIIFB மீது தொடரப்பட்ட அனைத்து சம்மன்களையும் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி அமலாக்கத்துறை வாபஸ் பெற்றது.

மேலும், மாநிலத்தின் செலாவணிகளின் முதன்மை பங்கு வகிக்கும் KIIFB கடந்த 2019 வரையில் 2ஆயிரத்து 150கோடி ரூபாய் முதலீடு ஈட்டியது. இந்த விகிதத்தை தென் மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புகளுக்காக 50கோடி ரூபாயாக அதிகரிக்க உள்ளதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில், தற்போது மீண்டும் அமலாக்கத்துறை புதிதாக முன்னாள் நிதியமைச்சர் தாமஸுக்கு KIIFB முறைகேடு குறித்து விசாரணைக்கு, கொச்சியிலுள்ல அமலாக்கத்துறை அலுவலகத்தில் வருகின்ற ஜன.12ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.