ETV Bharat / bharat

ரயில்வே பணியின்போது மின்சாரம் தாக்கி 5 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு

author img

By

Published : May 30, 2023, 2:28 PM IST

ஜார்கண்ட் மாநிலத்தில், ரயில்வே மின் கம்பங்கள் நடுகின்ற பணியின்போது, மின்சாரம் தாக்கியதில் 5 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ரயில்வே பணியின்போது மின்சாரம் தாக்கி 5 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு
ரயில்வே பணியின்போது மின்சாரம் தாக்கி 5 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு

தான்பட்: ஜார்கண்ட் மாநிலத்தின் தான்பட் மாவட்டத்தில், தான்பட் ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட காத்ராஸ் ரயில் நிலையம் அருகே ரயில்வே பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர், மின் கம்பம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த உயர் அழுத்த கம்பியில் மின் கம்பம் மோதியதால், அதில் மின்சாரம் பாய்ந்து உள்ளது.

இவ்வாறு கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 5 ரயில்வே ஒப்பந்த பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து அறிந்த மண்டல ரயில்வே மேலாளர் கமல் கிஷோர் சின்ஹா உள்பட ரயில்வே ஊழியர்கள், மீட்புப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதையும் படிங்க: Jammu Bus Accident: ஜம்முவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி; பலர் கவலைக்கிடம்!

இந்த சம்பவமானது ஹவுரா - புது டெல்லி ரயில்வே வழித்தடத்தில் உள்ள தான்பட் கோமோ அருகே இருக்கும் நிசித்பூர் ரயில்வே கேட் அருகில் இருந்த மின்சார கம்பியில் இருந்து 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தால், பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

முக்கியமாக ஹவுராவில் இருந்து கல்கா செல்லும் நேதாஜி எக்ஸ்பிரஸ் டேதுல்மரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஹவுராவில் இருந்து பிகானேர் செல்லும் பிரதாப் எக்ஸ்பிரஸ் தான்பட் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் சாலை மார்க்கமாக சம்பவ இடத்தை அடைந்தனர்.

இதையும் படிங்க: கணவரை எரித்துக் கொன்ற மனநலன் பாதித்த மனைவி... எதுக்கு தெரியுமா?

மேலும் சில நபர்கள் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம், கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், ரயில்வேயின் 25 ஆயிரம் வோல்ட் மின்சார அழுத்தம் கொண்ட ஒயரை, பணியில் இருந்த அனைத்து ஊழியர்களும் இரும்பு மின்சார கம்பியின் மூலம் கையில் பிடித்திருந்துள்ளனர் என தெரிகிறது.

இதையும் படிங்க: கணவரை எரித்துக் கொன்ற மனநலன் பாதித்த மனைவி... எதுக்கு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.