ETV Bharat / bharat

ரூ.60 கட்டணம் வசூலித்ததற்கு ரூ.61 ஆயிரம் இழப்பீடு - நீதிமன்றம் கொடுத்த அதிரடி ஷாக்!

author img

By

Published : Apr 2, 2023, 10:06 AM IST

Etv Bharat
Etv Bharat

பார்க்கிங் கட்டணத்திற்கு வழங்கப்பட்ட சலுகையை மீறி 60 ரூபாய் வசூலித்ததை எதிர்த்து 10 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்திய நபர், 61 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக பெற்ற ரூசிகர சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது.

டெல்லி : நுகர்வோர்கள் நலன் மருந்து பல்வேறு பொருட்களில் தில்லுமுல்லுகள் நடப்பது அண்மைக் காலங்களில் சகஜமாகி வருகின்றன. அதிக விலை, குறைந்த எடை, பொருட்களில் கலப்படம், தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் அதிக பணம் ஈட்டும் நோக்கில் செயல்படுபவர்களிடமிருந்து நுகர்வோரைக் காக்க விழிப்புணர்வு அவசியமாக தென்படுகிறது.

அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், தனக்கு நடந்த அநீதியை ஏறத்தாழ 10 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டு உள்ளார். சலுகையை மீறி 60 ரூபாய் கட்டணம் விதித்த நிறுவனத்திற்கு 61 ஆயிரம் ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தி உள்ளார் ஆனந்த. யார் அவர்?, என்ன செய்தார்?, இதில் நுகர்வோருக்கு என்ன விழிப்புணர்வு உள்ளது? என்பதை இந்த செய்தியில் காணலாம்.

தெற்கு டெல்லியைச் சேர்ந்தவர் கமல் ஆனந்த். கடந்த 2013 ஆம் ஆண்டு தன் மனைவியுடன் தெற்கு டெல்லியில் உள்ள சாகேத் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்று உள்ளார். அப்போது ஆனந்தை அணுகிய பிரபல காபி நிறுவன ஊழியர், தங்கள் கடையில் காபி வாங்கி பருகினால் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும் கூப்பன் மூலம் பார்க்கிங் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து தன் மனைவி மற்றும் தனக்கு என 570 ரூபாய் கொடுத்து ஆனந்த் இரு காபி வாங்கி உள்ளார். காபி கடையில் கொடுத்த பில் கொண்டு பார்க்கிங் சென்ற ஆனந்த், அதை காண்பித்து தனக்கு பார்க்கிங் கட்டணத்தில் விலக்கு அளிக்குமாறு கோரியுள்ளார். இதற்கு அந்த பார்க்கிங் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் காபி நிறுவனம் தரப்பில் தங்களுக்கு இது போன்ற எந்த தகவலும் அளிக்கவில்லை என்று கூறி 60 ரூபாய் பார்க்கிங் கட்டணமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆனந்த் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார். ஏறத்தாழ 10 ஆண்டுகள் இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்றது.

வழக்கு தொடர்பாக ஆனந்த் தாக்கல் செய்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், அதை எதிர்த்து அந்த நிறுவனத்தால் ஆவணங்கள் தாக்கல் செய்ய இயலவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்தை குற்றவாளியாக நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் சலுகையை மீறி 60 ரூபாய் கட்டணம் வசூலித்த குற்றத்திற்காக 61 ஆயிரத்து 201 ரூபாயை ஆனந்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க : US Storm : அமெரிக்காவை புரட்டிப் போட்ட சூறாவளிக் காற்று - 26 பேர் பலி! மின்சாரமின்றி லட்சம் பேர் தவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.