ETV Bharat / bharat

மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 11:02 AM IST

INDIA Alliance CWC MEETING
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

INDIA Alliance CWC MEETING: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், மூத்தத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோ முன்னிலையில், நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும் 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்தும் காங்கிரஸ் காரிய கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல் தோல்விகள் குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி (CWC) சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.21) நடைபெற உள்ளது. முன்னதாக, டிச.19ஆம் தேதி நடந்த இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் வர உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் தாரிக் அன்வர், 'இன்று நடக்க உள்ள எதிர்க்கட்சிக் கூட்டணி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர், ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடனான கலந்துரையாடலில் கட்சி அமைப்பை நம்பிக்கைக்கு கொண்டு செல்வார் எனத் தெரிவித்துள்ளார்.

இக்கமிட்டியின் உறுப்பினரான குலாம் அஹ்மத் மிர் கூறுகையில், “சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில் நான்கு மாநிலங்களில் தோல்விக்கான காரணம் குறித்தும் அந்தந்த மாநில அணிகளுடன் நடத்திய ஆய்வில் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி அமைப்பிற்கு அவர் விளக்குவார். அதேநேரத்தில், 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தளுக்கான ஆயத்தப் பணிகள், கூட்டணிகளுக்கான செயல் திட்டம் என்ன என்பன உள்ளிட்டவைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும்' எனக் கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு, பொறுப்பாளர்களை நியமிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை இக்கமிட்டியின் தலைவர் விளக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் டிஎம்சி, இடதுசாரி கட்சிகள், எஸ்பி போன்ற பிரதான கட்சிகள் பங்கேற்கின்றன.

இது குறித்து மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், '2024 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கான செயல் திட்டம், டிச.28-ல் நாக்பூரில் நடக்க உள்ள காங்கிரஸ் நிறுவனப்பட்ட தினப் பேரணி ஏற்பாடுகள் ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜவுடன் கடுமையான போட்டி நிலவும் நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா காந்தி இதனை எதிர்கொள்தற்கான காலம் குறித்து விளக்குவார் என்றார்.

இளைஞர்களின் வேலைவாய்ப்புகள், வேலையில்லா திண்டாட்டம், அரசியலமைப்பு நிறுவனங்களை குறைவாக மதிப்பிட்டு மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, முதலாளித்துவம் உள்ளிட்டவைகள் குறித்து காங்கிரஸின் இந்தியா கூட்டணியின் பிரசாரம் அமையும்' எனவும் அவர் தெரிவித்தார்.

4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தோல்விகளைப் பொறுத்த வரையில், ராஜஸ்தானில் பதவியில் இருக்கும் சிட்டிங் எம்எல்ஏக்கள், சத்தீஸ்கரில் தேர்தல் மேலாளர்களின் அதீத நம்பிக்கை, மத்தியப் பிரதேச அணியில் ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகியவையே முக்கியக் காரணங்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: தாமிரபரணி வெள்ளம்.. விமானப்படை, கடற்படையினர் மீட்புப் பணியில் தீவிரம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.