ETV Bharat / bharat

அருணாச்சல்: பசுமை விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

author img

By

Published : Nov 19, 2022, 7:10 PM IST

அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநாகரில் தோன்யி போலோ என்னும் முதல் பசுமை விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பசுமை விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி
பசுமை விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

இட்டாநாகர்: அருணாச்சல பிரதேச மாநிலம் இட்டாநகரில் தோன்யி போலோ பசுமை விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 19) திறந்து வைத்தார். அத்துடன் 600 மெகாவாட் திறன்கொண்ட கமெங் புனல் மின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதுகுறித்து பிரதமர் கூறுகையில், இந்த தோன்யி போலோ விமான நிலையம் அருணாச்சலப் பிரதேசத்தின் நான்காவது செயல்பாட்டு விமான நிலையமாக இருக்கும். இதன் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தில் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

  • When I laid the foundation stone for the Donyi Polo Airport in 2019, a few people linked it to elections. But, our Government works differently. We take up ambitious projects and complete them on time. pic.twitter.com/txTlJZkCsu

    — Narendra Modi (@narendramodi) November 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1947 முதல் 2014 வரை வடகிழக்கு பகுதியில் 9 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. கடந்த 8 வருடங்களில் மட்டும் இப்பகுதியில் 7 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு இந்தியாவை இணைக்கும் விமானங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ‘தோன்யி’ என்றால் சூரியன் என்றும், ‘போலோ’ என்றால் சந்திரன் என்றும் பொருள்.

அருணாச்சலப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து மத்திய அரசு ரூ.50,000 கோடி செலவில் திட்டங்களை வகுக்கும். அந்த வகையில் புதிய விமான நிலைய உள்கட்டமைப்பு, மேம்பாட்டுடன் சரக்கு சேவைத் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம் மாநில விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பெரிய சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்க முடியும். அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மூங்கில் சாகுபடி முக்கிய தொழிலாகும்.

இங்கு தயாரிக்கப்படும் மூங்களில் சார்ந்த பொருள்கள் இந்தியாவில் மட்டுல்லாமல், உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய இப்பகுதி மக்களுக்கு அரசின் நடவடிக்கை உதவுகிறது. இப்போது நீங்கள் மற்ற பயிர்களைப் போலவே மூங்கில் பயிரிடலாம், அறுவடை செய்யலாம், விற்கலாம். அதற்கு அரசின் திட்டங்கள் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார். மேலும் இந்த அருணாச்சலப் பிரதேச விமான நிலையம் மூலம் மிசோரம், மேகாலயா, சிக்கிம், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் 75 ஆண்டுகளில் முதல் முறையாக விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: காசியில் தமிழ் சங்கம்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.