ETV Bharat / bharat

காசியில் தமிழ் சங்கம்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்!

author img

By

Published : Nov 19, 2022, 4:50 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ் சங்கத்தை இன்று (நவ-19) பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Etv Bharatகாசி தமிழ் சங்கத்தை  தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
Etv Bharatகாசி தமிழ் சங்கத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

உத்தர பிரதேசம் :காசிக்கும், தமிழுக்கும் பழங்காலம் முதலே தொடர்பு உள்ளது. அந்த உறவை வலுப்படுத்தும் நோக்கில் காசியில் தமிழ்ச் சங்கம் தொடங்க திட்டமிடப்பட்டது. அத்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (நவ-19) காசி தமிழ்ச் சங்கம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. இரு மாநிலத்தின் பண்டைய தோற்றம் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் இரு மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்கள், தத்துவவாதிகள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், கைஞர்கள் போன்றவர்களுக்கு ஒத்துழைக்கவும், நிபுணத்துவம், கலாச்சாரம், யோசனைகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் ஒருவருக்கொருவர் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளவும் வாய்ப்பளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழா பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆம்பிதியேட்டர் மைதானத்தில் நடைபெற்றது. இதில், கலந்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி காசி வாழ் தமிழர்களிடையே உரையாடினார். மேலும், தமிழ்நாட்டில் இருந்து 2500 க்கும் மேற்பட்ட சங்க பிரதிநிதிகள் வாரணாசியில் நடக்கும் கருத்தரங்குகளில் பங்கேற்கவும், அங்குள்ளவர்களிடம் உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலங்கானா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவின் தென் பகுதிகளுக்கும் காசிக்கும் நெடுங்காலமாக பலமான உறவு நீடித்து வருகிறது. காசியின் குறுகிய தெருக்களில், ஆறு சுற்றுப்புறங்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் கடந்த காலங்களில் குடிவந்து தற்போது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அங்கு வசித்து வருகின்றனர்.

முன்னதாக, மாநிலத்தின் முதல் கிரீன்ஃபீல்ட் விமான நிலையமான டோனி போலோ விமான நிலையத்தை இட்டாநகரில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இதையும் படிங்க:காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.