ETV Bharat / bharat

80 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ள ரயில்வே வாரியம்!

author img

By

Published : Sep 5, 2020, 8:17 PM IST

80 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ள ரயில்வே வாரியம்!
80 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ள ரயில்வே வாரியம்!

டெல்லி : செப்டம்பர் 12ஆம் தேதி முதல் இந்திய ரயில்வே இயக்கவுள்ள 80 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என்று ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 5) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய யாதவ், "கோவிட்-19 பரவல் தடுப்பு ஊரடங்கின் போது சிரமத்திற்குள்ளான இடம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், சொந்த ஊர் திருப்ப மத்திய அரசின் உத்தரவின் கீழ் 230 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தற்போது, அரசின் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ளும் மக்களின் பயணத்தை இலகுவாக்க, காத்திருப்பு பட்டியலைக் குறைக்கும் நோக்கில் அதிக தேவை உள்ள பாதைகளில் குளோன் ரயில்களை இயக்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

அதற்காக செப்டம்பர் 12ஆம் தேதி முதல் இந்திய ரயில்வே மேலும் 80 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. அவற்றின் பயண இருக்கை முன்பதிவு செப்டம்பர் 10 முதல் தொடங்கும். இதுபோன்ற பிற முக்கிய விடயங்களுக்காக மாநில அரசுகளிடம் கோரிக்கை வரும்போதெல்லாம் நாங்கள் மேலும் சில ரயில்களை இயக்குவோம்.

சிறப்பு ரயில்களை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். எங்கிருந்து ரயில் தேவை ஏற்பட்டாலும் உடனடியாக ஒரு குளோன் ரயிலை இயக்குவோம். கொல்கத்தா மெட்ரோ சேவைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக துறை ரயில்வே மேற்கு வங்க அரசிடம் ஆலோசனை நடத்திவருகிறது" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.