ETV Bharat / bharat

ஜெகன் மோகனை சந்தித்துப் பாராட்டிய நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி

author img

By

Published : Jan 22, 2020, 10:55 AM IST

Kailash Satyarthi meets Jagan Mohan Reddy
Kailash Satyarthi meets Jagan Mohan Reddy

அமராவதி: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சட்டமன்றத்தில் சந்தித்தார். அச்சந்திப்பில் குழந்தைகள் நலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்ததாகத் தெரிவித்தார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, குழந்தைகள் நலத்துக்காக பல்வேறு நலத்திட்டங்களை ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்ததையடுத்து ஈர்க்கப்பட்டதால், அவரை சந்தித்ததாகத் தெரிவித்தார்.

குழந்தைகளின் நலன் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்ததாகவும் கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்தார்.

கிராம செயலகங்கள், தன்னார்வ அமைப்புகளை அமைத்ததற்காக ஜெகன் மோகன் ரெட்டியை கைலாஷ் சத்யார்த்தி பாராட்டினார். சமீபத்தில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்மார்களை ஊக்குவிக்கும் வண்ணம் வருடந்தோரும் நிதி உதவியளிக்கும் அம்மா வோடி திட்டத்தை அறிவித்ததால் பெரிதும் மக்களால் ஈர்க்கப்பட்டார், ஜெகன் மோகன் ரெட்டி.

இதுகுறித்து கைலாஷ் கூறுகையில், ஜெகன் மோகனின் யோசனைகள் சுவாரஸ்யமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இதற்காக தன் ஆதரவையும் தனது கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அமைப்பின் சார்பில் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி ஆந்திரப் பிரதேசத்தை குழந்தைகள் நலன் மிக்க மாநிலமாக்க மாற்ற கைலாஷ் உறுதியளித்தார்.

இதையடுத்து மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இலவச கல்வி கிடைக்கவேண்டும் என்று குறிப்பிட்ட கைலாஷ் எந்த வகையான சமூகப் பாகுபாடும் அக்குழந்தைக்கு இருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

இளம் முதலமைச்சரான ஜெகன் மோகனின் ஆட்சியில் ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியாக வாழும் கனவு நிறைவேறும் என தான் நம்புவதாகவும் கைலாஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒருபுறம் மூன்று தலைநகரங்கள் மறுபுறம் புதிய மாவட்டங்கள் அதிரடி காட்டும் ஜெகன்

Intro:Body:

blank


Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.