ETV Bharat / bharat

டெல்லியில் 7 டிகிரி குளிரா?

author img

By

Published : Nov 22, 2020, 12:35 PM IST

Delhi's minimum temperature to be around 7 degree Celsius today, air quality in 'poor' category
Delhi's minimum temperature to be around 7 degree Celsius today, air quality in 'poor' category

டெல்லி: தேசியத் தலைநகர் பகுதியில் இன்று ஏழு டிகிரி செல்சியஸாக குளிர் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேசிய தலைநகர் டெல்லியில், நாளுக்கு நாள் குளிரின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் 7.4 டிகிரி செல்சியஸாக இருந்த குளிரின் அளவு இன்று ஏழாகக் குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் காற்றின் தரம் மிகவும் குறைந்து தற்போது காற்றின் தரக் குறியீடு 259ஆக உள்ளதாகவும் மாசு கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாகவே குளிர் காலங்களில் காற்று மாசு அதிகரித்து வருவதால் முதியவர்களும் குழந்தைகளும் மூச்சுவிடுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டெல்லியில் தொடர்ந்து மோசமாகும் காற்றின் தரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.