ETV Bharat / bharat

கர்நாடக விமான நிலையங்களில் கொரோனா குறித்த கண்காணிப்பு தீவிரம்

author img

By

Published : Mar 6, 2020, 10:33 AM IST

corona virus checking in karnataka airportcorona virus checking in karnataka airportcorona virus checking in karnataka airport
corona virus checking in karnataka airport

கர்நாடகாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து எந்தத் தகவலும் வராத நிலையில், விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 461 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்பம் நலத் துறையானது, சுமார் 461 பேரை வீட்டில் தனிமைப்படுத்தியிருக்கிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த எந்தத் தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'கொரோனா வைரஸ் அறிகுறிகளுக்காக 461 நபர்களை வீட்டிலேயே வைத்து கண்காணித்துவருகிறோம். கர்நாடகாவில் வைரஸ் பாதிப்பு குறித்தான எந்தத் தகவலும் இதுவரை வரவில்லை' என மாநில சுகாதாரத் துறையின் தொற்று நோய்களின் இணை இயக்குநர் பிரகாஷ் குமார் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் சோதனைக்காக மாநிலத்திலிருந்து அனுப்பப்பட்ட 273 மாதிரிகளில் வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் 68 ஆயிரம் 717 பேர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலும், மங்களூரு சர்வதேச விமான நிலையத்திலும் வெப்பநிலை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.

வைரஸ் தாக்குதலைக் கண்டறிய இதுவரை 225 பேர் 28 நாள் தொடர் காண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 16 பேர் இந்த கண்காணிப்பை நிறைவுசெய்தனர்.

இதையும் படிங்க... கொரோனா வைரஸ் - பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.