ETV Bharat / bharat

லடாக் களநிலவரம் ஆய்வு: எல்லைக்கு விரையும் தளபதி நரவணே!

author img

By

Published : Jun 23, 2020, 1:26 PM IST

Naravane
Naravane

டெல்லி: இந்திய - சீன ராணுவத்தின் மோதலுக்குப்பின் முதன்முறையாக லடாக் களநிலவரத்தை ராணுவத் தளபதி நரவணே இன்று ஆய்வு செய்கிறார்.

இந்திய - சீனா எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்பு ராணுவம் மோதிக்கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.
இந்த பதற்றமான சூழலை தணிக்க இரு தரப்பு ராணுவத்தைச் சேர்ந்த மூத்த அலுவலர்கள் நேற்றும், இன்றும் (ஜூன்22-23) ஆலோசனை நடத்தினார்கள்.
மேலும் இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், ராணுவத் தளபதி முகுந்த் நரவணே இன்று லடாக் எல்லைப் பகுதியைப் பார்வையிடுகிறார். அங்கு, “கள நிலவரத்தை ஆய்வு செய்யும் அவர், எல்லையில் உள்ள வீரர்களிடம் பேசுகிறார்.

மேலும், ராணுவத்தின் தயார் நிலை குறித்து கேட்டறியவுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - சீனா சுமார் 3,500 கி.மீ தூரத்திற்கு எல்லையை பகிர்ந்துவரும் நிலையில், கடந்த மாதம் இறுதியில் லடாக் பகுதியில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை சீனா குவிக்கத் தொடங்கியது.

இதற்கு பதிலடியாக இந்தியாவும் எல்லைக்கு ராணுவ வீரர்களை அனுப்பி பலப்படுத்தியது. இதையடுத்து கடந்த 15ஆம் தேதி இரவில், இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனத் தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இதையும் படிங்க: உலகிலேயே முதன்முறையாக கரோனாவுக்கு மருந்து - வெளியிடும் பதஞ்சலி நிறுவனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.