ETV Bharat / bharat

இந்தியாவில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது 352 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Dec 22, 2022, 9:33 AM IST

இந்தியாவில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது 352 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது 352 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது 352 பேர் உயிரிழந்ததாக மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: நாடாளுமன்ற எம்.பி. ஜெயந்த் சிங் சவுத்ரி எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று (டிச. 21) எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.

அதில், இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டி மற்றும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கியதில் 352 பேர் வரை உயிரிழந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் உத்தரப்பிரதேசம் (57) முதல் இடத்திலும், தமிழ்நாடு (46) 2ஆவது இடத்திலும், புதுடெல்லி (42) 3ஆவது இடத்திலும் உள்ளன. 4ஆவது இடத்தில் அரியானா (38) உள்ளது என தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் யாரும் ஈடுபட்ட தகவல் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும்போது குறைந்த அளவாக, கேரளா மற்றும் சத்தீஷ்காரில் தலா ஒருவரும், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 2 பேரும், சண்டிகார், தாத்ரா நாகர் ஹாவேலி மற்றும் உத்தரகாண்டில் தலா 3 பேரும் உயிரிழந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மகளின் குழந்தை ஆசையை பூர்த்தி செய்ய பெற்றோர் செய்த கொடூர சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.