'ஜனநாயகன்' வெற்றி பெற தவெகவினர் சிறப்பு பூஜை
🎬 Watch Now: Feature Video

Published : July 22, 2026 at 3:33 PM IST
தேனி: 'ஜனநாயகன்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி தேனியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சிறப்பு பூஜை நடத்தினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசையில் கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவானது 'ஜனநாயகன்' திரைப்படம். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் நாளை (ஜூலை 23) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் 1,000 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.
விஜய்யின் கடைசி திரைப்படம் இது என்பதால் 'ஜனநாயகன்' திரைப்படத்தை திருவிழா போல் கொண்டாட தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
மற்றொருபுறம், திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் விஜய்யின் புகைப்படங்களை வைத்து பூஜை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள வாராஹி அம்மன் திருக்கோயிலில் 'ஜனநாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டி, தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை வைத்து இன்று (ஜூலை 22) சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தவெக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அதே போல், தேனி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் 'ஜனநாயகன்' வெளியாகும் திரையரங்குகளில் பேனர்கள், தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.