ETV Bharat / state

தீரன் சின்னமலை 268வது பிறந்தநாள்; திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மரியாதை! - Dheeran Chinnamalai statue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 5:04 PM IST

various-party-leaders-also-paid-their-respects-dheeran-chinnamalai-statue-in-guindy-chennai
தீரன் சின்னமலை சிலைக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என பல்வேறு கட்சி தலைவர்கள் மரியாதை!

Dheeran Chinnamalai statue: சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க என பல்வேறு கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்குத, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, அரசு அதிகாரிகள் மற்றும் கூட்டணிக் கட்சி காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப் பெருந்தகை பேசுகையில், "அரசியலமைப்பு, பன்முகத்தன்மை சீர்குலைப்பது தீரன் சின்னமலைக்கு செய்யும் துரோகம் என்றும், தீரன் சின்னமலை போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பா.ஜ.க அரசு துரோகம் இழைக்கிறது. தேர்தலில் பாசிச சக்திகளை விரட்டி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன் பேசுகையில், "நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவுக்கான தேர்தல். பிரதமர் அமைச்சரவை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆளுமை மிக்க பிரதமர் தேர்ந்தெடுக்கக்கூடிய நேரம் இது. தமிழக மக்கள் இந்த தேர்தல் நன்கு அறிந்து புரிந்து தெரிந்து வாக்களிப்பார்கள் என நம்புகிறேன். இந்த தேர்தலில் தேசிய கூட்டணிக்குப் பெற்று பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தொடர் வாக்குறுதிகளை வாக்காளர்கள் ஏற்க தயாராக இல்லை" என தெரிவித்தார்.

இதையடுத்து அ.தி.மு.க.சார்பில் தீரன் சின்னமலை சிலைக்கு மூத்த தலைவர்களான ஜெயக்குமார், தமிழ் மகன் உசேன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில், "தி.மு.க. அரசு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதி ஒன்றும் கூட நிறைவேற்றவில்லை. அதற்கு எதிர்மறையாக விலைவாசி உயர்வால் பொதுமக்கள் மிகவும் கோபத்தில் இருப்பதால் இந்த தேர்தலை தி.மு.க.விற்கு எதிர்ப்பு அலை வீசுவதாகவும் தெரிவித்தார்.‌ இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் முதலிடம் இரண்டாம் இடமோ அல்லது மூன்றாவது இடமோ வருகிறதோ இல்லையோ. ஆனால், இந்த தேர்தலில் அதிமுக நிச்சயமாகக் கோப்பை வெல்லும் என தெரிவித்தார்.

மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சமாதிக்கு பா.ஜ.க. வேட்பாளர்கள் செல்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மறைந்து 6 ஆண்டுகள் மேலாகியும் இதுவரை ஏன் செல்லவில்லை. இப்போது செல்வது காரணம் அ.தி.மு.க. வாக்கு பெறுவதற்குத் தான் செல்கின்றனர். ஆனால், அ.தி.மு.க. வாக்கு என்பது அதிமுகவிற்கு தான் பாஜக தலைவர்கள் இல்லாத காரணத்தால் இவர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் சமாதிக்குச் செல்கின்றனர். அதற்கு எங்களுடன் அவர்கள் வந்துவிடலாம்" என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜக சார்பில் முன்னாள் ஆளுநரும் பாஜக தென் சென்னை வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், "பிரதமர் சென்னையில் நடத்திய ரோட் ஷோ பற்றி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்தது மட்டுமல்லாமல் கொடிகள் வைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால், நேற்று முதல்வரும் ரோட் ஷோ தான் நடத்தி உள்ளார்.
நாங்கள் ரோட் ஷோ நடத்தும் போது கொடிகள் மற்றும் பேனர்களுக்கு அனுமதி அளிக்காத காவல் துறையினர் நேற்று முதல்வர் நடத்தியதற்கு மற்றும் அனுமதி தருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திட்டங்களுக்கும் மத்திய அரசிடம் இருந்து காப்பி செய்த ஸ்டிக்கர் திட்டங்கள் தான். முதல்வர் ஸ்டாலின் முதலில் திட்டங்களுக்குத் தான் ஸ்டிக்கர் ஒட்டினார். தற்போது, பிரச்சார நடைமுறைக்கு ஸ்டிக்கர் ஒட்டிவிட்டார். பிரதமர் மேற்கொள்ளும் வழிமுறைகளை மேற்கொண்டு ஸ்டிக்கர் ஸ்டாலின் ஆக திட்டங்களுக்கு மட்டுமல்லாமல் பிரச்சார நடைமுறைக்கும் மாறிவிட்டார்" என தெரிவித்தார்.

இதேபோன்று நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட பிற கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி யாருக்கு.. ரேஸில் முந்துவது யார்? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.