ETV Bharat / state

நிர்மலா தேவி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இருவர் மீதும் மேல்முறையீடு செய்யப்படும் - சிபிசிஐடி தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் பேட்டி - Nirmala devi case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 9:50 PM IST

Nirmala devi case
Nirmala devi case

Nirmala devi case: நிர்மலா தேவி வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன் கருப்பசாமி ஆகிய இருவர் மீதும் சி.பி.சி.ஐ.டி தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Nirmala devi case

விருதுநகர்: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் தண்டனை விபரங்கள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிர்மலா தேவி வழக்கில் அரசு வழக்கறிஞர் சந்திரசேகர் பேசுகையில்,
நிர்மலா தேவி வழக்கிலே இன்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. சமூகத்திற்குத் தேவையான தீர்ப்பை இந்த நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

இருந்தபோதிலும் முதல் குற்றவாளியைத் தவிர இரண்டு, மூன்றாம் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிசிஐடி சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். தண்டனை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற முதல் குற்றவாளி வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று அதை இன்றே முடிவு செய்ய வேண்டும் என கூறியிருக்கிறோம்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் குற்றவாளிகள் தொடர்பான அவர்களுடன் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறி உள்ளதால் அவர்கள் விடுதலை ஆகி உள்ளார்கள் இருந்தபோதிலும் சட்ட நுணுக்கங்கள் கொண்டு மேல்முறையீடு செய்யப்படும்.

பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் 2 மற்றும் 3-வது குற்றவாளிகளான உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கு சாதகமாகப் பிறழ் சாட்சியமாக மாறியதால் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

இதனைத் தொடர்ந்து நிர்மலா தேவி வழக்கறிஞர் தண்டனை விவரங்கள் குறித்து கோரிக்கை ஒன்றை முன் வைத்தார். குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிவுகளில் இரண்டு பிரிவுகள் என் கட்சிக்காரர் தொடர்புடையது அல்ல. எனவே, தண்டனையைக் குறைக்க வேண்டும் எனவும் இதுகுறித்து சில ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கால அவகாசம் கோரினர்.

அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று தீர்ப்பு விவரங்களை இன்றே அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு நாளை (ஏப்ரல் 30) இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவிகளுக்குத் தவறான பாதை.. நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு.. வழக்கு கடந்து வந்த பாதை! - Nirmala Devi Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.