ETV Bharat / state

6 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு; 77 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு! - Theni POCSO case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 10:19 PM IST

Etv Bharat
Etv Bharat

Theni POCSO Court: 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 77 வயது முதியவர், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததோடு, சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணையானது, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று இந்த வழக்கு விசாரணை முடிவு பெற்ற நிலையில், சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 75 வயது முதியவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததோடு, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்டத் தவறினால், மேலும் ஓர் ஆண்டு காலம் மெய் காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டிய குற்றத்திற்காக, மேலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்ததோடு, சிறைத் தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கி உள்ளார். அதனைத் தொடர்ந்து, அம்முதியவரை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! - Theni Mahila Court

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.