ETV Bharat / state

“விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தமிழ் கற்பித்தல் பயிற்சி” - டிஐஜி ஸ்ரீராம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2024, 7:37 PM IST

டிஐஜி ஸ்ரீராம் செய்தியாளர் சந்திப்பு
டிஐஜி ஸ்ரீராம் செய்தியாளர் சந்திப்பு

Chennai Airport CISF: விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காகத் தமிழ் மொழியை மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என டிஐஜி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

டிஐஜி ஸ்ரீராம் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 75வது குடியரசு தின விழா முன்னிட்டு விமான நிலைய இயக்குநர் தீபக் மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினர். இதில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி ஸ்ரீராம் மற்றும் விமான நிலைய தீயணைப்பு வீரர்கள், விமான நிலைய அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு குடியரசு தின விழாவைக் கொண்டாடினர்.

அதனைத் தொடர்ந்து முதல் முறையாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் வீரர்கள்,ஆண் வீரர்களுடன் இணைந்து விமான நிலையத்தில் தீவிரவாதி தாக்குதல் ஏற்பட்டால் அவர்களிடம் இருந்து பயணிகளை எப்படிக் காப்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சிகளைச் செய்து காட்டினர்.

மேலும் 30 அடி உயரத்தில் இருந்து தேசியக் கொடியைப் பிடித்தபடி கயிற்றில் இறங்குதல் போன்ற வீர செயல்களைச் செய்து காட்டியதோடு மனித கோபுரம் அமைத்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.விமான நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வீர,பைரவா என மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி ஸ்ரீராம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அப்போது கூறியதாவது, “விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காகத் தமிழ் மொழியை மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் இதன் மூலம் பொதுமக்களிடம் அணுகுவது எளிதாக இருக்கும்.

வருடம் தோறும் சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் அதற்கு ஏற்றார் போல் வீரர்கள் மற்றும் அதிநவீன கருவிகளும் அதிகரிக்கப்பட்டு சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகத்தை வைத்து அடையாளம் காணுதல் மற்றும் முழு ஸ்கேனிங் பரிசோதனை போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது இதன் மூலம் பயணிகள் ஒரு புதுமையான அனுபவத்தையும் எந்த இடையூறு இன்றி பயணிக்க முடியும்.

சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் இருப்பது போன்று அயோத்தி விமான நிலையத்திலும் புதிதாகக் கட்டப்பட்ட பாராளுமன்றத்திற்கும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் இதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை பூரணம் அம்மா முதல் முகமது ஜூபேர் வரை குடியரசு தின விருதுகள் விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.