ETV Bharat / state

கோயில் திருவிழாவுக்கு வந்த 17 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் தொல்லை.. திருப்பூரில் நிகழ்ந்த கொடூரம்.. 7 பேர் அதிரடி கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 9:52 AM IST

Updated : Mar 13, 2024, 10:01 AM IST

Etv Bharat
Etv Bharat

Tiruppur minor girl gang rape: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கோயில் திருவிழாவுக்கு தாயுடன் வந்த 17 வயது சிறுமி கூட்டுப்பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர்: காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவிலில் கடந்த 9-ஆம் தேதி வீரகுமாரசாமி கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிடுவதற்காக 17 வயது சிறுமி தனது தாயாருடன் வந்துள்ளார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போதே சிறுமி மாயமாகியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் அருகில் உள்ள இடங்களில் தேடியுள்ளார். கிடைக்காததால் உறவினர்களுக்குத் தகவல் அளித்துத் தேடுதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே மறுநாள் காலை வீடு திரும்பிய சிறுமி, தன்னை சிலர் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக தனக்கு நடந்த கொடுமையைக் கூறி அழுதுள்ளார்.

பின்னர், இது குறித்து சிறுமியின் தாயார் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம்(11.03.2024) அன்று வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரபாகர், செம்மான்டபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து இவ்வழக்கில் தொடர்புடைய மூலனூர் மம்பாடியை சேர்ந்த தினேஷ் (27), பாலசுப்ரமணியம் (30), வெள்ளகோவில் ஏ.பி.புதூரை சேர்ந்த நவீன்குமார் (26), மயில்ரங்கத்தை சேர்ந்த நந்தகுமார் (30), பாரதி நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் சதீஷ் (28) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் நேற்று(செவ்வாய்கிழமை) கைது செய்தனர்.

பின்னர், காங்கேயம் மகளிர் காவல்நிலைய போலீசார் அவர்கள் ஏழு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பேருந்து மீது லாரி உரசி விபத்து; உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

Last Updated :Mar 13, 2024, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.