ETV Bharat / state

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 6:01 PM IST

Etv Bharat
Etv Bharat

Tamilnadu Weather Report: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜன.21) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஜன.21 மற்றும் ஜன.22 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜன.21) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

அதேபோல், நாளை (ஜன.22) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. ஜன.23 முதல் ஜன.27 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை: ஜன.21 மற்றும் ஜன.22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 2, மணிமுத்தாறு (திருநெல்வேலி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), ஊத்து (திருநெல்வேலி), நாங்குனேரி (திருநெல்வேலி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), களக்காடு (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), சிட்டம்பட்டி (மதுரை). நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 1. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

இதையும் படிங்க: தென்தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசனா மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.