ETV Bharat / state

மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை.. திசையன்விளையில் சோகம்! - suicide case in thisayanvilai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 4:10 PM IST

Husband And Wife Commits Suicide: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் குடும்ப தகராறு காரணமாகக் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், உவரி, ராஜா தெருவைச் சேர்ந்தவர் பிரபு என்ற பிரபாகர். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த புனிதா என்ற பெண்ணை காதலித்து குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துள்ளார்.

புனிதா பிரபாகரனின் அண்ணன் மகள் என்றும், புனிதாவிற்கு சித்தப்பா முறை வரும் எனவும் கூறப்படுகிறது. முறை தவறிக் காதலித்து திருமணம் செய்த இருவரும் குடும்பத்தினரிடமிருந்து விலகி தனியே வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் திசையன்விளை அருகே உள்ள எருமை குளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி உள்ளனர். கணவருக்குக் குடிப்பழக்கம் உள்ளதால் வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு இருவருக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, புனிதா தற்கொலை செய்துள்ளார். இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திசையன்விளை போலீசார் புனிதாவின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பிரபாகரன் மனைவி இறந்து விட்டதாகவும், தானும் இறக்கப் போவதாகவும் உவரியில் உள்ள தனது அண்ணனுக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அண்ணன் திசையன்விளை போலீசாருக்கு தகவல் சொல்ல நேற்றிரவு முழுவதும் பல இடங்களில் போலீசார் தேடி வந்துள்ளனர்.

எங்கும் தேடியும் கிடைக்காத நிலையில், இன்று காலை திசையன்விளை - உவரி புறவழிச்சாலை சுடுகாட்டுப் பகுதியிலுள்ள தெற்கு ஓடைக்கரை சுடலை மாடசாமி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒருவர் சடலமாகக் கிடப்பதாகவும், அவரது அருகில் ஒரு செல்போனும் கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதைக்கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நேற்றிரவு தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தொலைப்பேசியில் தெரிவித்த பிரபாகரின் சடலம் தான் என்பதை உறுதி செய்து, அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன் - மனைவி இருவரும் குடும்ப தகராறு காரணமாகத் தற்கொலை செய்த சம்பவம் குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை தடுப்பு உதவி எண்: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு அல்ல. ஆகவே, சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 அல்லது சிநேகா உதவி எண் 044-24640050-க்கு அழையுங்கள். இணைய வழித் தொடர்புக்கு 022-25521111 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும், மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும், நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட் 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028 என்கிற முகவரிக்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம்! - TN EX CM KARUNANITHI

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.