ETV Bharat / state

"பெண்கள் முன்னேற்றத்திற்கு கல்வி ஒரு சிறந்த ஆயுதம்" - ஆளுநர் ஆர்.என். ரவி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 8:03 PM IST

கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்

TN Governor RN Ravi: பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வி ஒரு சிறந்த ஆயுதம் என கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பொன்விழா ஆண்டு கலையரங்கம் கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு கலையரங்கத்தினைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாணவர்கள் மத்தியில், சிவராத்திரி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட ஆளுநர் ரவி, மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது.

பெண்கள் முன்னேற்றத்திற்குக் கல்வி ஒரு சிறந்த ஆயுதம். இந்தக் கல்லூரியில் அதிக அளவில் மாணவிகள் இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு உலக அரங்கில் இந்தியா உரிய இடத்தைப் பெறவில்லை. ஆனால் இப்போது உலக அளவில் இந்தியாவின் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் உலக பொருளாதாரத்தில் பதினொன்றாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்தியா. விரைவில் மூன்றாம் இடம் பிடிக்க உள்ளது. இதற்கு இளம் தலைமுறையினரின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

பெண்கள் முன்னெடுத்துச் செல்லும் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. பெண்களுக்கான கல்வி சுகாதாரம் ஆகியவற்றுக்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இன்றைக்குப் பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.

பெண்கள் தொழில் முனைவோராக உருவாவதில் மத்திய அரசின் முத்ரா கடன் உதவித் திட்டம் பயனுள்ளதாக அமைந்ததுள்ளது. அதேபோல் மத்திய அரசின் ஜன் தன் திட்டம் ஆகியவற்றில் பெருமளவில் மகளிர் பயன்பெற்றுள்ளனர்.

மேலும், விண்வெளி, விமானப்படை போன்ற துறைகளிலும் பெண்கள் சிறப்பான வகையில் தங்களது சேவைகளைச் செய்து வருகிறார்கள். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் அதிக அளவில் பெண்கள் அரசியல் தலைவர்களாக ஆட்சியாளர்களாக உருவாக்குவார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரோகித், கில் சதம்.. வலுவான முன்னிலையுடன் இந்திய அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.