ETV Bharat / state

மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் காலிப் பணியிடங்களை எப்போது நிரப்பப்படும்? - மேயர் பிரியா பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 4:41 PM IST

மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் காலிப் பணியிடங்கள் தேர்தலுக்கு பிறகு நிரப்பப்படும்
மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் காலிப் பணியிடங்கள் தேர்தலுக்கு பிறகு நிரப்பப்படும்

Chennai Mayor Priya: மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப் பணியிடங்கள், தேர்தலுக்குப் பிறகு நிரப்பப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னையில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் கொசு உற்பத்தியாவதை தடுக்க ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியை, சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதனையடுத்து, ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் கொண்டு மருந்து தெளிக்கும் பணிகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, "பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலை ஓரங்களில் மழை நீர் வடிகால் பகுதிகளில் கால்வாய்களில் தொடர்ந்து கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. கொசுத்தொல்லை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், கொசு ஒழிப்பு பணிகள் வீடு வீடாகவும், நீர்நிலைகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஃபக்கிங் மிஷின் 440, பவர் ஸ்ப்ரேயர் மிஷின் 109, பேட்டரி ஸ்பிரேயர் மிஷின் 287, வீடு வீடாகச் சென்று கொசுத்தெளிப்பான் அடிக்கக்கூடிய மிஷின் 219, மினி ஃபக்கிங் மிஷின் மழைநீர் வடிகால் பகுதிகளில் அடிக்கக்கூடிய மிஷின் 8 உள்ளது. இதனைத் தொடர்ந்து, வட்டாரத்திற்கு இரண்டாக 6 ட்ரோன்கள் மூலம் கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு, மலேரியா பரவலைக் கட்டுப்படுத்தவும், கொசு உற்பத்தியைத் தடுக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 31 டெங்கு பாதிப்பு இருந்த நிலையில், இந்த ஆண்டு 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டில் டெங்கு காய்ச்சல் பரவல் குறைந்துள்ளது எனக் கூறிய அவர், குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் சூழல் இருந்தால், அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும், தேர்தலுக்குப் பிறகு பணியிடங்கள் நிரப்பப்படும்" என்றும் கூறினார்.

இதையும் படிங்க: உயர் நீதிமன்ற காலக்கெடுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம் - செந்தில் பாலாஜி தரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.