ETV Bharat / state

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் உலா வந்த ஒற்றை கரடி - வீடியோ வைரல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 4:08 PM IST

குன்னூரில் கூலாக உலா வந்த ஒற்றைக் கரடி
குன்னூரில் கூலாக உலா வந்த ஒற்றைக் கரடி

Bear Visit: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ராணுவப் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உலா வரும் ஒற்றை கரடியை கூண்டு வைத்து பிடிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குன்னூரில் கூலாக உலா வந்த ஒற்றைக் கரடி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தை பொறுத்த அளவில், 65 சதவிகிதம் அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட மாவட்டமாகும். இதனால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்கள் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலரும் அச்சமடைந்து வருகின்றனர்.

உதகையில் கடந்த பிப்.9ஆம் தேதி இரவு, கரடி குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று இரவு (பிப்.29) குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்தில் ஒற்றை கரடி ஹாயாக உலா வந்தது. இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ராணுவ பயிற்சி கல்லூரியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற வரும் முக்கியமான கல்லூரி என்பதால், கரடியால் ஆபத்து ஏற்படாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ராணுவ வீரர்கள் அதிகாலை நேரங்களில் ராணுவ சாலையில் மற்றும் ராணுவ மையத்தில் பயிற்சி மேற்கொள்ளும் பொழுது கரடியின் நடமாட்டம் உள்ளதால், ராணுவ வீரர்கள் கவனமுடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு சுற்றித் திரியும் ஒற்றை கரடியால், மனித வனவிலங்கு மோதல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே, கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டுமென அனைவரும் வனத்துறைக்குக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், இது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, கரடி நடமாடும் பகுதியில் கூண்டு வைத்து பிடிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், ராணுவப் பகுதியில் உள்ள பொதுமக்கள், இரவு நேரங்களில் தனியாகச் செல்ல வேண்டாம் என்று ஒற்றை கரடியை கண்டவுடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: குன்னூர் சிம்ஸ் பார்க் அருகே துணை மின் நிலையம் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.