ETV Bharat / sports

ரிஷப் பண்ட் குறித்து புதிய அப்டேட்.. டெல்லி அணி கூறியது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 9:49 PM IST

Etv Bharat
Etv Bharat

Rishabh Pant: வரும் ஐபிஎல் தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விளையாடுவது குறித்து ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸின் சிஇஓ, பிகேஎஸ்வி சாகர் பேசியுள்ளார்.

துபாய்: ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதி தொடங்கி மே மாதம் வரை நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்பது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்டின் வருகை தான்.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த வபத்தால் கிட்டதட்ட மறுபிறவி எடுத்த அவர், எதிர் பார்த்ததை விட மிக வேகமாக குணமடைந்து வருகிறார். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்டில் இடம் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் வரும் ஐபிஎல் தொடரில் ரி என்ட்ரி கொடுப்பார் என உறுதியாக சமீபத்தில் தெரிய வந்தது.

இந்த நிலையில், ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸின் சிஇஓ, பிகேஎஸ்வி சாகர், ரிஷப் பண்டின் வருகை குறித்து மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "ஆம் அவர் இந்த ஐபிஎல் சீசனில் விளையாடுவார் என நம்புகிறோம். அவர் மிகப்பெரிய வீரர். அவர் விளையாடினால் அது நமக்கு நல்லது.

எங்கள் பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோ அவரது உடற்தகுதிக்கு முழு வீச்சில் பணியாற்றி வருகின்றது. மேலும் முழு உடற்தகுதியுடன் வரும் மார்ச் மாதம் எங்களுக்காக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கிறோம். மேலும், இங்கிலாந்து வீரரான ஹரி புரூக் மிடில் ஆடரில் விளையாட விரும்புகிறோம்" என்றார்.

மேலும், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் மினி ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, இங்கிலாந்து அணியின் வீரர் ஹாரி ப்ரூக்கை 4 கோடி ரூபாக்கும், ஆஸ்திரேலிய வீரர் ஜே ரிச்சர்ட்சன் 5 கோடி ரூபாய்க்கும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஷாய் ஹோப்பை 75 லட்ச ரூபாய்க்கும் வாங்கியது. அதேபோல் இந்திய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் குமார் குஷாக்ராவை 7.2 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் - மீண்டும் தக்கவைத்த டாடா குழுமம்.. எத்தனை கோடிக்கு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.