அலிகர்க் : உத்தர பிரதேசத்தில் சாலையோரம் நின்ற துறவியை மதுபோதையில் இருந்த இருவர் அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேசம் மாநிலம் அலிகர்க்கில் கடந்த மார்ச் 30ஆம் தேதி இரவு மதுபோதையில் இருந்த இரண்டு பேர் பெட்ரோல் பங்க் அருகில் நின்ற துறவி ஒருவரை கடுமையாக தாக்கி உள்ளனர்.
துறவியை சாலையில் தள்ளிவிட்டு அடித்து துன்புறுத்தியும் இருவரும் குச்சியால் தாக்கி உள்ளனர். இதைக் கண்டு பெட்ரோல் பங்க் ஊழியர்களை வருவதை பார்த்த மதுபோதை ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். பெட்ரோல் பங்க் உழியர்கள் துறவியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே துறவி அளித்த புகாரின் பேரில் பெட்ரோல் பங்க் சிசிடிவியை சோதனையிட்ட போலீசார் மதுபோதையில் துறவியிடம் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்தனர். இதில் ஒருவர் பெயர் ராஜேஷ் என்றும் மற்றொருவர் கபிஸ் என்றும் இருவரும் சகோதர்கள் என்றும் மது போதையில் துறவியிடம் சண்டையிட்டதும் தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே மதுபாதையில் சகோதரர்கள் துறவியை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது - குடியரசுத் தலைவர் வழங்கினார்! - LK Advani Bharat Ratna Award