ETV Bharat / bharat

பட்ஜெட்டில் எதிரொலித்த முத்தலாக், 33% மகளிர் இடஒதுக்கீடு... தேர்தல் தொலைநோக்கா? மகளிர் நலன் கருதியா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 4:10 PM IST

Updated : Feb 3, 2024, 12:41 PM IST

Etv Bharat
Etv Bharat

2024 Interim Budget: 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் முத்தலாக், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள் கவனம் பெற்றன.

டெல்லி : 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் நேற்று (ஜன. 31) தொடங்கியது. இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் நிதி சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தொடர்ந்து தேர்தலுக்கு பின் அமையும் அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்நிலையில், மக்களவையில் பட்ஜெட் உரை நிகழ்த்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறந்த கொள்கைகள் மற்றும் மத்திய அரசின் பணிகள் காரணமாக மக்களிடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். முத்தலாக்கை சட்டவிரோதமாக்கியதன் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் உடனடி விவாகரத்துகளில் இருந்து மத்திய அரசு பாதுகாப்பான சூழலை உருவாக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் சமூதாய பிரச்சினைகளில் மகளிருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் அரசு உற்றுநோக்கி வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு என மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் முக்கிய முடிவெடுக்கும் செயல்முறைகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்து உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகள் மகளிருக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தின் ஒருங்கிணைந்த தொகுப்புகள் என்றும் ஒட்டுமொத்தமாக, மதம் அல்லது கலாச்சாரம் எதுவாக இருந்தாலும், பெண்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலமாகவும், அதிக வாய்ப்புகளை வழங்குவதன் மூலமாகவும் பெண்களுக்கு சிறந்த மற்றும் பிரகாசமான எதிர்காலம் கிடைக்க வலிவகை செய்யப்படும் என நம்பிக்கை உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 58 நிமிட இடைக்கால பட்ஜெட் உரையில் கூறினார்.

இதையும் படிங்க : Interim Budget 2024: கர்பப்பை புற்றுநோயை தடுக்க சிறுமிகளுக்கு தடுப்பூசி - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Last Updated :Feb 3, 2024, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.