ETV Bharat / bharat

ராமோஜி அகடாமி ஆப் பிலிம்ஸ் இலவச திரைப்பட பயிற்சி வகுப்புகள்! எப்படி விண்ணப்பிப்பது? - Ramoji Academy Of Movies

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 12:50 PM IST

Updated : Apr 2, 2024, 3:33 PM IST

Etv Bharat
Etv Bharat

Ramoji Academy Of Movies: திரைப்பட துறையில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு அற்புதமான வாய்ப்பாக ராமோஜி அகாடமி ஆப் மூவிஸ் நிறுவனத்தில் இலவச பிலிம் மேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது. பிராந்திய மொழிகளில் கற்றுத் தரப்படும் இந்த பயிற்சி வகுப்பில் எப்படி சேருவது உள்ளிட்டவை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

ஐதராபாத் : திரைத் துறையில் சாதிக்கத் துடிக்கும் நபரா நீங்கள்?. ஐதராபாத்தை சேர்ந்த பிரபல சுற்றுலா நிறுவனமான ராமோஜி குழுமத்தின், டிஜிட்டல் பிலிம் அகாடமியான ராமோஜி அகாடமி ஆப் மூவிசில் இலவச பிலிம் மேக்கிங் பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்த பிலிம் மேக்கிங் பயிற்சிகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பங்களா, மராத்தி, இந்தி ஆகிய 7 இந்திய மொழிகள் தவிர ஆங்கிலத்திலும் கற்றுத் தரப்படுகிறது. கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, தயாரிப்பு, பிலிம் எடிட்டிங் மற்றும் டிஜிட்டல் \பிலிம் மேக்கிங் உள்ளிட்டவைகள் இந்த பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படுகின்றன.

இலவச பாடங்கள்:

திரைப்பட தயாரிப்பு, உருவாக்கம் உள்ளிட்ட பணிகளில் விருப்பம் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற வகையில் பிராந்திய மொழிகளில் முற்றிலும் இலவசமாக பாடத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், உயர் தர திரைப்பட தயாரிப்பு, உருவாக்கம் உள்ளிட்ட பணிகளை எளிதாக அணுகுவது குறித்தும் பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படுகின்றன.

புதுமையான மற்றும் மதிப்புமிக்க நிகழ்வுகள் :

பிராந்திய மற்றும் கலாசாரம் சார்ந்த பிலிம் மேக்கிங் நுணக்கங்களை அந்தந்த மொழிகளில் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுத் தருவது. மேலும் மாணவர்கள் கலாசார சூழல் மற்றும் பிராந்தியத்திற்கு ஏற்ற வகையில் தனித்துவமான கருப்பொருள்களில் கதை சொல்வது, கற்றல் செயல்முறை மற்றும் தகவல் உள்வாங்கள் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு சிறந்த பாடநெறிகள் இந்த பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும்.

பயிற்சி வகுப்பில் சேரத் தகுதி:

ராமோஜி அகாடமி ஆப் பிலிம்ஸ் வகுப்புகளில் சேருவதற்கு என தனி வயது வரம்பு மற்றும் தகுதி கிடையாது. குறைந்தபட்ச வயது 15 ஆண்டுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்பு மொழியில் தேர்ச்சி கட்டாயமாகும். தேவையான தகவல் தொடர்புகளைப் பெற மாணவர் சரியான தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொண்டிருக்க வேண்டும்.

பாதுகாப்பான மற்றும் எளிதான கற்றல் சூற்றுச்சூழல்:

ராமோஜி அகாடமி ஆப் மூவிஸ், தடையற்ற மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் தேர்வு தளமான Safe Exam Browser (SEB) வழங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது திரைப்பட உருவாக்க கல்வியை படிப்படியாக கற்றுக் கொள்ளலாம். Safe Exam Browser (SEB) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வது மூலம் மாணவருக்கு விரிவான பாடப்பிரிவு மற்றும் அதற்கான தேர்வுகள் வழங்கப்படும்.

மாணவர் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு முன் ஒவ்வொரு பாடப்பிரிவுகளை கற்று அறிந்து அதற்கான தேர்வுகளை நிறைவு செய்ய வேண்டும். இதனால் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பயனுள்ள கற்றல் செயல்முறையை மாணவர்கள் எளிதாக பெற முடியம். ராமோஜி அகாடமி ஆப் மூவிஸ் தரப்பில் ஒவ்வொரு மாணவரின் செயல்திறன்கள் சோதிக்கப்பட்டு அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க தேவையான உதவிகள் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். மேலும் இதுகுறித்து விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : கச்சத்தீவு விவகாரம் -"ஜெய்சங்கர் திடீர் பல்டி அடிப்பது ஏன்? மோடி ஆட்சியில் மீனவர்கள் கைது இல்லையா?"- ப சிதம்பரம் கேள்வி! - P Chidambaram On Katchatheevu Issue

Last Updated :Apr 2, 2024, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.