ETV Bharat / bharat

மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் விபத்து: பெண் விமானி படுகாயம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 7:00 PM IST

Updated : Mar 6, 2024, 7:21 PM IST

Etv Bharat
Etv Bharat

Madhya pradesh Training flight accident: மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் விமானி படுயாகங்களுடன் மீட்கப்பட்டு உள்ளார்.

குணா : மத்திய பிரதேசத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பெண் விமானி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளார். சாகர் மாவட்டம் தனா பகுதியைச் சேர்ந்த சிம்ஸ் விமான போக்குவரத்து நிறுவனத்தின் ஒற்றை என்ஜின் கொண்ட Cessna 172 என்ற விமானத்தை பெண் விமானி இயக்கி உள்ளார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குணா விமான தளத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கும் பணியில் பெண் விமானி ஈடுபட்டு உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையை விட்டு விலகி தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மேலும், விமானத்தில் இருந்து எரிபொருள் கசிந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் விமானி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளார். சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் மீட்பு குழு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : நேபாளம் பேருந்து விபத்து: 7 பேர் பலி! எப்படி நடந்தது?

Last Updated :Mar 6, 2024, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.