ETV Bharat / international

நேபாளம் பேருந்து விபத்து: 7 பேர் பலி! எப்படி நடந்தது?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 5:33 PM IST

Etv Bharat
Etv Bharat

Nepal Bus falls into river: நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து உள்ளது.

காத்மண்டு : நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். கபில்வஸ்து பகுதியில் இருந்து காத்மண்டு நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் பேருந்து கஜுரி பகுதியில் திரிசூலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த நேபாள போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏறத்தாழ 7 பேர் இந்த கோர விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. பள்ளத்தில் பேருந்து இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு நேபாளம் பிரதமர் புஷ்ப கமல் தஹல் இரங்கல் தெரிவித்து உள்ளார். நேபாளத்தில் இதுபோன்ற சாலை விபத்துகள் அடிக்கடிகள் நேருகின்றன.

கடந்த ஜனவரி மாதம் நடந்த சாலை விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மோசமான நிலப்பரப்பு, குண்டும் குழியுமான சாலை மற்றும் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் நேபாளத்தில் அடிக்கடி இது போன்ற விபத்துகள் ஏற்படக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் - என்.ஐ.ஏ அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.