ETV Bharat / bharat

6வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 9:31 AM IST

Etv Bharat
Etv Bharat

Budget 2024 Updates: 2024 -2025 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார்.

டெல்லி: அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஒருபுறம் தீவிரம் காட்டி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் நேற்று(ஜன.31) தொடங்கியது. மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்து, நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றவுள்ளாா். தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலாகாது என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏற்கெனவே கூறியுள்ளாா்.

தேர்தல் காலம் என்பதால் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள், வரிக் குறைப்பு உள்பட மக்களைக் கவரும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024 - 2025-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதன்படி, ஜூலையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் நாட்டின் நிதி அமைச்சராக நிா்மலா சீதாராமன் பதவியேற்றாா். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சா் என்ற பெருமைக்குரிய அவர், இதுவரை 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று தொடா்ந்து 6-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Interim Budger 2024 : எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா இடைக்கால பட்ஜெட்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.