ETV Bharat / bharat

உங்கள் தொகுதி வேட்பாளர் குற்றப் பின்னணி உள்ளவரா..? இப்பவே 'கேஒய்சி' ஆப் மூலம் பாருங்க..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 12:41 PM IST

chief election commission launched KYC app in Lok Sabha Election
chief election commission launched KYC app in Lok Sabha Election

Know Your Candidate: தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் குற்றப் பிண்ணனி, சொத்து விபரங்கள் உள்ளிட்டவற்றை 'கேஒய்சி' ஆப் மூலம் வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பொறுப்புகள், சொத்து மதிப்பு மற்றும் குற்றப் பின்னணி உள்ளிட்டவற்றை குறித்து வாக்காளர்கள் தெரிந்து கொள்ள 'நோ யுவர் கேண்டிடேட்' (Know Your Candidate - KYC) என்ற புதிய செயலி ஒன்றை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், "வாக்காளர்கள், தங்கள் தொகுதியில் மக்கள் பிரதிநிதியாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குற்றப் பின்னணி இருப்பின் அது குறித்து தெரிந்து கொள்வது வாக்காளர்களின் உரிமை. அதற்காக தேர்தல் ஆணையம் தரப்பில் கேஒய்சி (KYC) எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன் மூலம் அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரின் குற்றப் பின்னணி உட்பட அனைத்து விவரங்களையும், வாக்காளர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்று ஐஓஎஸ் (iOS) ஆகிய இரண்டு இயங்குதளம் கொண்ட செல்போன்களிலும் பதிவிறக்கம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் குறித்த தகவல்களை ஊடகங்கள் வழியாக 3 முறை வெளியிட வேண்டும். குறிப்பாக தங்கள் மீதுள்ள வழக்குகள், அதற்கு வழங்கப்பட்ட தண்டனைகள் ஆகியவற்றை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விரிவாக தெரியப்படுத்த வேண்டும்.

குறிப்பாக, தகுதி வாய்ந்த மற்ற வேட்பாளர்களை தங்கள் கட்சியில் இருக்கும் போதிலும் அவர்களை தவிர்த்து விட்டு, இந்த குறிப்பிட்ட நபரை வேட்பாளராக தேர்வு செய்த காரணம் குறித்து அவரை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகளும் மக்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும்" எனத் தலைமை தேர்தல் ஆணைய தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய உதவும் வகையிலான க்யூஆர் குறியீடு (QR code) தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மே 13ஆம் தேதியிலும், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். மேலும், 26 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலும், இந்த மக்களவை தேர்தலோடு இணைந்தே நடத்தப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'நெல்லை மாவட்டத்தில் 333 பதட்டமான வாக்குச்சாவடிகள்' - ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.